Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
மட்டனை தயிருடன் சேர்த்து இந்த மாதிரி குழம்பு வையுங்க... சாதத்துக்கும், டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்...!
Mutton Kulambu Recipe in Tamil: சண்டே வந்தாலே அது அசைவம் சாப்பிடுவதற்கான நாள் என்று மாறிவிட்டது. மற்ற நாட்களில் அசைவம் சாப்பிட்டாலும் சண்டே அசைவம் சாப்பிடுவது என்பது கூடுதல் ஸ்பெஷல்தான். இந்த சண்டேக்கு மட்டன் வாங்க போறீங்களா? மட்டனை வைச்சு குழம்பு வைக்கப் போறீங்களா? அப்படினா வழக்கமான மட்டன் குழம்பு வைக்காம கொஞ்சம் எள் சேர்த்து இந்த மாதிரி மட்டன் குழம்பு செய்யுங்க. டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.
இந்த மட்டன் குழம்பு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இது தவிர இந்த குழம்பு, இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த வித்தியாசமான மட்டன் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இந்த மட்டன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- மட்டன் - அரை கிலோ
- மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
- தயிர் - 1/4 கப்
- எண்ணெய் தேவையான அளவு
- மிளகு - ஒரு டீஸ்பூன்
- சீரகம் - ஒரு டீஸ்பூன்
- சோம்பு - ஒரு டீஸ்பூன்
- எள் - 2 டீஸ்பூன்
- பட்டை சிறு துண்டு
- கிராம்பு 2
- அன்னாசி பூ - 1
- முந்திரி - 6
- பெரிய வெங்காயம் - 2
- தக்காளி -2
- வர மிளகாய் 4
- பூண்டு பல் 10
- உருளைக்கிழங்கு - ஒன்று
- கறிவேப்பிலை - 1 கொத்து
- கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
செய்முறை:
- மட்டனை முதலில் நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
- பின்னர் மட்டனுடன் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 4 விசில் விட்டு வேக வைக்கவும்.
- வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், எள், பட்டை, கிராம்பு, அன்னாசி பூ மற்றும் முந்திரி சேர்த்து வதக்கவும்.
- பின்னர் அதனுடன் வெங்காயம், வர மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். இந்த கலவையை நன்கு ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- மற்றொரு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக பொன்னிறமாக வறுக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள வெங்காய மசாலா கலவையை சேர்த்து நன்கு கிளறவும்.
- அதனுடன் வேக வைத்த மட்டனை சேர்க்கவும்.
- பின்னர் ஒரு முருங்கைக்காய் அல்லது ஒரு உருளைகிழங்கு அதனுடன் நறுக்கி சேர்க்கவும்.
- மட்டன் வேக வைத்த தண்ணீர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- நன்கு கொதித்த பின்னர் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். விருப்பப்பட்டால் தேங்காய் அரைத்தும் சேர்க்கலாம்.
- சுவையான மற்றும் ஆரோக்கியமான மட்டன் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications