Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சிக்கன் வாங்குனா.. எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இந்த ஹைதராபாத் சிக்கன் மராக்கை செய்யுங்க..
Hyderabadi Chicken Marag Recipe In Tamil: இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்யப் போகிறீர்களா? அந்த சிக்கனைக் கொண்டு ஒரு வித்தியாசமான ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் இதுவரை செய்திராத ஒரு ரெசிபியை ட்ரை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் ஹைதராபாத் சிக்கன் மராக் ரெசிபியை செய்யுங்கள்.
இந்த சிக்கன் மராக் ரெசிபி இட்லி, தோசை, சப்பாத்தி, பிரியாணி, புலாவ் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். குறிப்பாக இது ரிச் ப்ளேவருடன், ருசியாகவும், மணமாகவும் இருக்கும். இந்த சிக்கன் மராக்கை சூப் போன்றும் குடிக்கலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு இந்த ஹைதராபாத் சிக்கன் மராக் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹைதராபாத் சிக்கன் மராக் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைத்து அரைப்பதற்கு...
* பால் - 1 கப்
* பாதாம் - 10
* முந்திரி - 10
* பிஸ்தா - 10
தாளிப்பதற்கு...
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 2
* கல்பாசி - 2 துண்டு
* பிரியாணி இலை - 2
* மராட்டி மொக்கு - 2
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 4 (கீறியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* சிக்கன் - 1/2 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* புதினா - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* தயிர் - 1 கப்
* தண்ணீர் - 1 லிட்டர்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் வெதுவெதுப்பான பாலில் பாதாம், பிஸ்தா, முந்திரி
ஆகியவற்றை சேர்த்து நன்கு 15-20 நிமிடம் ஊற வைத்து, பின்பு மிக்சர்
ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, அன்னாசிப்பூ, பிரியாணி இலை,
மராட்டி மொக்கு, அன்னாசிப்பூ, சோம்பு, பிரியாணி இலை ஆகியவற்றை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி
பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, 8 நிமிடம் சிக்கனை மூடி
வைத்து மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் ஓரளவு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள நட்ஸ் விழுதை
சேர்த்து நன்கு கிளறி, புதினா, கொத்தமல்லியை சேர்த்து கிளறி, தயிரை
ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் 1 லிட்டர் நீரை ஊற்றி கலந்து நன்கு கொதித்து வரும் போது,
அதில் மிளகுத்தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி 5 நிமிடம் நன்கு
கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் கொத்தமல்லியைத் தூவி, 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி
கலந்து இறக்கினால், சுவையான ஹைதராபாத் சிக்கன் மராக் தயார்.



Click it and Unblock the Notifications