Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
அடிக்கிற குளிருக்கு சிக்கனை காரசாரமா இப்படி மிளகு வறுவல் செஞ்சு சாப்பிடுங்க... அள்ளும்...
Chicken Milagu Varuval Recipe In Tamil: தற்போது பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. வெயிலை பார்க்கவே முடிவதில்லை. இப்படி கடுமையான பனிப்பொழிவின் போது நன்கு காரசாரமாக சாப்பிட தோன்றும். அதுவும் விடுமுறை நாளில் அனைவரது வீடுகளிலும் அசைவ உணவுகளை பலவாறு சமைத்து சாப்பிடுவோம்.
இன்று உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கியிருந்தால், அந்த சிக்கனைக் கொண்டு, குளிருக்கு இதமாக இருக்கும் வகையில் நன்கு காரசாரமாக சிக்கன் மிளகு வறுவலை செய்து சாப்பிடுங்கள். அதுவும் இந்த வறுவலை செய்து, சிம்பிளாக ரசம் வைத்து சாப்பிட்டாலே, பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த சிக்கன் மிளகு வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் மிளகு வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து பொடிப்பதற்கு...
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
வறுவலுக்கு...
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 150 கிராம் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* சிக்கன் - 1/2 கிலோ
* தண்ணீர் - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு, மிளகு,
சீரகம் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைத்து,
மிக்சர் ஜாரில் போட்டு நன்கு பொடித்து, தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும்
சிறிது உப்பு சேர்த்து, நன்கு வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் சிக்கனை கழுவி சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து பிரட்டி விட வேண்டும்.
* அதன் பின் அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து, மிதமான
தீயில் வைத்து 20 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* 20 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அரைத்து வைத்துள்ள பொடியை
சேர்த்து நன்கு 3 நிமிடம் பிரட்டி விட வேண்டும்.
* நீர் ஓரளவு வற்றியதும், அதில் நறுக்கிய கறிவேப்பிலை மற்றும்
கொத்தமல்லியை தூவி கிளறி இறக்கினால், சுவையான சிக்கன் மிளகு வறுவல்
தயார்.



Click it and Unblock the Notifications