மார்ச் 1 முதல் புது ரூல்ஸ்.. பேங்க் பேலன்ஸ் லிமிட், UPI பண பரிமாற்றம்.. ஒரே நேரத்தில் 6 முக்கிய மாற்றங்கள்!

By Muthuraj

கடந்த பல மாதங்களை போலவே இந்த 2026 மார்ச் மாதமும், பொருளாதார மாற்றங்களும், வருவாய் விகிதங்களில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்களும் இந்திய மக்களின் மாதாந்திர செலவுகளை கடுமையாக பாதிக்க உள்ளன. அப்படியாக இந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 6 முக்கியமான மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. அதென்ன மாற்றங்கள்? இதோ விவரங்கள்:

1. ரயில்வே பொது மற்றும் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் மாற்றம்: பொது மற்றும் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான விதிகள் மார்ச் 1, 2026 ஆம் தேதி முதல் மாறுகிறது. பழைய இந்திய ரயில்வே யுடிஎஸ் ஆப் ஆனது மார்ச் 1 முதல் நிறுத்தப்பட்டு, புதிய ரயில் ஒன் ஆப் உடன் மாற்றப்படும். இந்த புதிய ஆப் பொது டிக்கெட்டுகள், பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் மற்றும் உள்ளூர் பயணம் தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்கும்.


march-1-2026-new-rules

2. யுபிஐ பேமண்ட்கள்: மார்ச் மாதத்தில் பெரிய தொகைகளின் ஆன்லைன் பரிமாற்றங்கள் இனி யுபிஐ பின் மூலம் மட்டுமே நடத்தப்படாது. மாறாக அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் பயோமெட்ரிக்ஸ் அல்லது மல்டி-பேக்டர் அங்கீகாரத்தையும் வங்கிகள் கட்டாயப்படுத்தும்.

3. பேங்க் பேலன்ஸ்: நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கிகள் குறைந்தபட்ச பேலன்ஸ் தேவையில் மாற்றங்களை செயல்படுத்தி வருகின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. முன்பு, ஒரு வங்கி கணக்கில் ஒரே நாளில் பேலன்ஸ் குறைவாக இருந்தால் அபராதம் விதிக்கப்பட்டது, ஆனால் இப்போது சராசரி மாதாந்திர பேலன்ஸ் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும்.

4. சிம் பைண்டிங் விதிகள்: மார்ச் 1 முதல் தொடங்கப்படும் புதிய சிம் பைண்டிங் விதியை அரசாங்கம் செயல்படுத்துகிறது. டிஜிட்டல் மோசடியை தடுக்க இந்த புதிய விதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய விதிகளின் கீழ், வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற ஆப்கள் இப்போது நேரடியாக உங்கள் சிம்முடன் இணைக்கப்படும். உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து சிம்மை அகற்றினால், இந்த ஆப்கள் உடனடியாக வேலை செய்வதை நிறுத்திவிடும். வைஃபை அல்லது வேறு எந்த நெட்வொர்க் மூலமாகவும் கூட, சிம் இல்லாமல் இந்த ஆப்களை இயக்க முடியாது.

மேலும் இந்த புதிய விதிமுறைகளின் கீழ், வாட்ஸ்அப் ஆனது ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் தானாகவே லாக்அவுட் ஆக வேண்டும். இதன் மூலம் ஆக்டிவ் ஆக இல்லாத டிவைஸ்கள் தானாகவே லாக்அவுட் செய்யப்படும் மற்றும் அந்த டிவைஸ்களில் பதிவுசெய்யப்பட்ட சிம் கார்ட் இல்லை என்றால், அவைகள் வாட்ஸ்அப்பில் வேலை செய்வது நிறுத்தப்படும்.

எனவே மார்ச் 1 ஆம் தேதி முதல், நீங்கள் மீண்டும் மீண்டும் வாட்ஸ்அப்பிலிருந்து லாக் அவுட் ஆகினால் - அதை ஏதோவொரு டெக்னீக்கல் கோளாறு என்று நினைக்க வேண்டாம்; அது ஒரு புதிய அரசாங்க விதி ஆகும். தேசிய பாதுகாப்பு கவலைகள் காரணமாகவே வாட்ஸ்அப் தளமானது இனிமேல் - ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் ஒரு முறை வாட்ஸ்அப் வெப்பில் இருந்து ஒவ்வொரு இந்திய பயனரையும் தானாகவே லாக்அவுட் செய்யும்.

5. எல்பிஜி சிலிண்டர் எரிவாயு விலைகள்: ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எல்பிஜி விலைகள் மாறும். கடந்த சில மாதங்களாக, வணிக எரிவாயு சிலிண்டர் விலைகள் மட்டுமே மாற்றங்களை கண்டன. சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் நிலையானதாகவே உள்ளன. கடந்த மாதம், வணிக எல்பிஜி சிலிண்டரின் விலைகள் தோராயமாக ரூ.49 அதிகரித்தன. இதேபோன்ற மாற்றம் இந்த மாதமும் அறிவிக்கப்படலாம்.

6. சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி: எல்ஜிபி-ஐ போலவே பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி மற்றும் விமானங்களில் பயன்படுத்தப்படும் விமான டர்பைன் எரிபொருளின் விலைகளை திருத்துவார்கள். இந்த விதிமுறைகளும் மார்ச் 1 முதல் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Credit: Gizbot

Story first published: Saturday, February 28, 2026, 23:20 [IST]
Desktop Bottom Promotion