Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள்
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2026 மார்ச் 01 ஆம் தேதி முதல் 2026 மார்ச் 07 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்காரர்களுக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிதி நிலைமை மோசமாக பாதிக்கப்படலாம். தேவையற்ற செலவுகள் பிரச்சனையை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் சிறப்பாக இருக்கும். நல்ல நிதி ஆதாயங்களும், தொழிலில் முன்னேற்றமும் ஏற்படும் வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். மனநிலை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி ரீதியாக நல்ல பலன்களைப் பெறக்கூடும். வருமானம் அதிகரிக்கும். வணிகர்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் தன்னம்பிக்கை சற்று குறைவாக இருக்கும். இருப்பினும் அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருப்பதால், செல்வாக்கும், நற்பெயரும் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். காதல் திருமணம் செய்ய நினைத்தால், சற்று பொறுமையாக இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஆனால் வருமானம் வேகமாக அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருந்தாலும் நிதி நிலைமை வலுவடையும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். மனம் சற்று நிலையற்றதாக இருக்கும். இந்த வாரத்தில் எந்த பெரிய முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். திருமண வாழ்க்கையில் பதற்றம் அதிகரிக்கும். தொழிலில் எந்த மாற்றம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையில் முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆனால் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படலாம். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிக மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். வருமானத்தை அதிகரிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். எந்த முடிவுகளை எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். சொத்து தொடர்பான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் குடும்ப சூழல் பதட்டம் நிறைந்ததாக இருக்கும். மாணவர்கள் தேர்வில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். தூக்கமின்மை அல்லது அமைதியின்மையால் அவதிப்படக்கூடும். சொத்து தொடர்பான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். வசதிகளும், ஆடம்பரங்களும் அதிகரிக்கும். தன்னம்பிக்கை வலுவாக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இருப்பினும் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் நிதி விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கிய பிரச்சனைகளால் சிரமப்படக்கூடும். மாணவர்களுக்கு நன்றாக இருக்கும். இருப்பினும், இந்த வாரம் அதிர்ஷ்டத்தை நம்பாமல் கடின உழைப்பை நம்பியிருக்க அறிவுறுத்தப்படுகிறது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக தலை அல்லது தொண்டை பிரச்சனைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. திருமண வாழ்க்கையில் பதற்றம் அதிகரிக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். இருந்தாலும் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக சற்று மோசமாக இருக்கும். பயணங்களை மேற்கொள்ளும் பேது கவனமாக இருக்க வேண்டும். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். தந்தையின் உதவியால் உங்கள் இலக்கை அடைவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வார இறுதியில் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். சமூகத்தில் உங்களின் கௌரவம் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


