Latest Updates
-
ரம்ஜான் ஸ்பெஷல் ஆப்கானி மட்டன் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கரும்புள்ளிகளை சாதாரணமா நினைக்காதீங்க.. அது கல்லீரல் பிரச்சனையின் அறிகுறியா இருக்கலாம்.. உஷார்.. -
பாபா வாங்காவின் தலைசுற்ற வைக்கும் உலக அழிவு பற்றிய கணிப்பு..எந்த வருடத்தில் உலகம் அழியப்போகுதாம் தெரியுமா? -
சுக்கிர பெயர்ச்சி: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் மீனத்தில் உருவாகியுள்ள ராஜயோகம்..இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம்...! -
வெந்தய கஞ்சியும்.. கறிவேப்பிலை துவையலும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுகள் கழித்து ஒன்றிணையும் சனி-புதன்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாக் அடிக்கப்போகுது.. -
Tamil Nadu Election 2026: தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏன் ஜிகர்தண்டாவை அவசியம் குடிக்கணும் தெரியுமா? -
ரம்ஜான் ஸ்பெஷல் திண்டுக்கல் ஸ்டைல் மட்டன் பிரியாணி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
4 முட்டையும், ஒரு உருளைக்கிழங்கும் இருந்தா இப்படி முட்டை அவியலை செய்யுங்க...டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்...!
Muttai Urulaikilangu Aviyal Recipe in Tamil: சாதம், சப்பாத்தி, மற்றும் தோசைன்னு எல்லாத்துக்கும் பண்ணுற ஒரு குழம்புன்னா அது முட்டை குழம்பு தான். இது எல்லாருக்கும் பிடிச்ச ஒண்ணு. பெரும்பாலும் முட்டையை பொரியல், ஆம்லெட் அல்லது குழம்பு வைத்துதான் சாப்பிடுவோம். ஆனால் முட்டையை நூற்றுக்கணக்கான வழிகளில் சமைக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
அப்படி முட்டையை சமைக்கும் ஒரு வித்தியாசமான வழிதான் முட்டை அவியல். அவியல் என்றால் பொதுவாக காய்கறிகளை வைத்துதான் செய்வார்கள். ஆனால் முட்டையை வைத்தும் சுவையான அவியலை செய்யலாம், அதிலும் இதில் உருளைக்கிழங்கை சேர்த்து சமைக்கும் போது இதன் சுவை வேற லெவலில் இருக்கும்.

இந்த முட்டை அவியல் தோசை, சப்பாத்திக்கு மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக இந்த முட்டை அவியல் செய்வதற்கு மிகவும் எளிதானதாகவும் இருக்கும். முட்டையை வித்தியாசமான சுவையில் சாப்பிட விரும்புபவர்கள் இந்த முட்டை அவியலை ஒரு முறையாவது முயற்சிக்க வேண்டும்.
உங்களுக்கு உருளைக்கிழங்கு முட்டை அவியல் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வித்தியாசமான முட்டைஅவியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 1 பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
- 1 உருளைக்கிழங்கு (நறுக்கியது)
- 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு தண்ணீர்
- கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
அவியல் செய்ய:
- 4 முட்டை
- 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
மசாலா அரைக்க:
- 1 கப் துருவிய தேங்காய்
- 2 வர மிளகாய்
- 2 ஸ்பூன் சீரகம்
- 2 ஸ்பூன் மிளகு
- 1 இன்ச் இஞ்சி
- 10 பூண்டு பல்
- 5 சின்ன வெங்காயம்
- 1 ஸ்பூன் புளி விழுது
- அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
செய்முறை:
- முதலில் முட்டையை மூழ்கும் அளவும் நீரில் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து உரித்து அதில் கோடு போட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு மிக்சி ஜாரில் துருவிய தேங்காய், வர மிளகாய், சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், புளி விழுது, மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொரகொரப்பான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு கடாயில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும், எண்ணெய் சூடானதும் அதில் பெரிய வெங்காயத்தைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் அதில் நறுக்கிய உருளைக்கிழங்கு, உப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடம் வதக்கவும்.
- பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து, உருளைக்கிழங்கு வேகும் வரை 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- உருளைக்கிழங்கு வெந்ததும் அரைத்த மசாலா விழுதை சேர்த்து நன்றாக கிளறவும். 3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- இப்போது வேகவைத்த முட்டைகளை மசாலாவில் சேர்த்து, 5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
- இறுதியாக, 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை மேலே ஊற்றி, நன்றாக கிளறவும்.
- அவ்வளவுதான் சூப்பரான முட்டை உருளைக்கிழங்கு அவியல் ரெடி.



Click it and Unblock the Notifications











