Latest Updates
-
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...!
மதியம் சிம்பிளா சமையலை முடிக்கணுமா? அப்ப பாய் வீட்டு ஸ்டைலில் குஷ்கா செய்யுங்க.. எப்படி செய்யணும் பாருங்க..
Muslim Style Kushka Rice Recipe In Tamil: மதியம் எப்போதும் சாதம் செய்து, அதற்கு சாம்பார், குழம்பு, ரசம் என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று ஸ்பெஷலாக ஏதாவது செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பாசுமதி அரிசி உள்ளதா?
அப்படியானால் அதைக் கொண்டு பாய் வீட்டு ஸ்டைலில் குஷ்காவை செய்யுங்கள். இந்த குஷ்கா ரைஸ் செய்தால், வீடே மணக்கும். இதற்கு சைடு டிஷ்ஷாக சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி என்று அனைத்தும் பொருத்தமாக இருக்கும். இல்லாவிட்டால் வெறும் தயிர் பச்சடி கூட நன்றாக இருக்கும்.

உங்களுக்கு பாய் வீட்டு ஸ்டைலில் குஷ்காவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாய்வீட்டு குஷ்கா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* ஏலக்காய் - 4
* கிராம்பு - 5
* பிரியாணி இலை - 2
* வெங்காயம் - 3 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* புதினா - 1 கைப்பிடி
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 10
* தயிர் - 4 டேபள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பாசுமதி அரிசி - 5 கப்
* தண்ணீர் - 7 1/2 கப்
செய்முறை:
* முதலில் பாசுமதி அரிசியை நீரில் 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய்
ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு
வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கொத்தமல்லி, புதினா சேர்த்து ஒருமுறை வதக்கி, பின்
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் முந்திரியை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, தயிரை ஊற்றி
நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் கரம் மசாலா மற்றும் நறுக்கிய தக்காளியை சேர்த்து 1
நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் 7 1/2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
நன்கு நீர் கொதிக்க ஆரம்பித்ததும், பின் ஊற வைத்துள்ள பாசுமதியை
அரிசியைக் கழுவிவிட்டு, நீரை நன்கு வடித்துவிட்டு சேர்த்து நன்கு
கிளறி, கொதிக்க வைக்க வேண்டும்.
* அரிசியானது நீரை ஓரளவு உறிஞ்சியதும், குக்கரை மூடி, குறைவான தீயில்
வைத்து, 1 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்தால், சுவையான பாய்வீட்டு குஷ்கா
தயார்.
Image Courtesy: SIMPLY SAMAYAL



Click it and Unblock the Notifications











