Just In
- 3 hrs ago
உடல் எடையை குறைக்கும்போது இரவு உணவிற்கு முட்டை அல்லது கோழி எடுத்துக்கொள்வது நல்லதா?
- 4 hrs ago
புதினா சட்னி
- 4 hrs ago
திருமணமான ஆண்கள் தினமும் 'இத' ஒரு கையளவு சாப்பிடுவது ரொம்ப நல்லதாம்... இது ஆண்களின் பல பிரச்சனையை போக்குமாம்..
- 5 hrs ago
இரவு உணவை எத்தனை மணிக்குள் சாப்பிட வேண்டும்? விரைவாக சாப்பிடுவது உண்மையில் நல்லதா?
Don't Miss
- Movies
கேன்ஸ் திரைப்பட விழா : மோடியை பாராட்டிய மாதவன்… எதுக்குனு தெரியுமா ?
- News
பேரறிவாளனை தூக்கில் போடனும்.. சட்டம் தெரியாத கே.டி.தாமஸ் நீதிபதியா? ஆவேசப்படும் அமெரிக்கை நாராயணன்
- Sports
ஜடேஜாவை முந்திய ரியான் பராக்.. விமர்சனங்களுக்கு மத்தியில் இப்படி ஒரு சாதனையா?? ரசிகர்கள் வியப்பு!
- Finance
பெங்களூர் நிறுவனத்தில் ஹேக்கர்கள் கைவரிசை.. ரூ.7.3 கோடி திருட்டு..!
- Automobiles
ஆக்டிவாவை யாருமே அடிச்சிக்க முடியாது.. சமீபத்தில் சைலண்டா நடந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?
- Technology
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காளான் பெப்பர் ப்ரை
காளான் பிரியரா நீங்கள் அல்லது உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அடிக்கடி உங்கள் வீட்டில் காளானை வாங்கி செய்வீர்களா? ஆனால் ஒரே மாதிரி காளானை சமைத்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் அடுத்த முறை 20 நிமிடத்தில் செய்யக்கூடிய ஒரு சுவையான மற்றும் காரசாரமான காளான் பெப்பர் ப்ரை செய்யுங்கள். இது சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
உங்களுக்கு காளான் பெப்பர் ப்ரையின் எளிய செய்முறையை தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காளான் பெப்பர் ப்ரை ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு..
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
காளான் ரோஸ்ட்டிற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 3
* காளான் - 250 கிராம்
* குடைமிளகாய் - 1
* தண்ணீர் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் மிளகு, சீரகம் மற்றும் சோம்பு ஆகியவற்றை போட்டு நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து இஞ்சி, பூண்டு சேர்த்து சிறிது வதக்க வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் காளானை சேர்த்து நன்கு கிளறி, குடைமிளகாயை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அரைத்த பொடி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீர் சேர்த்து நன்கு கிளறி, மிதமான தீயில் 10 நிமிடம் ரோஸ்ட் செய்ய வேண்டும்.
* இறுதியாக மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் நெய் சேர்த்து உருகியதும், கடுகு, பச்சை மிளகாய், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து காளானில் ஊற்றி கிளறி இறக்கினால், காளான் பெப்பர் ப்ரை தயார்.
Image Courtesy: steffisrecipes