Latest Updates
-
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்..
2 முட்டை இருந்தா இந்த பொருளுடன் சேர்த்து இப்படி பொரியல் பண்ணுங்க... சுவையானது ரொம்ப ஆரோக்கியமானதும் கூட...!
Murungai Poo Muttai Poriyal Recipe in Tamil: அனைவருக்கும் பிடித்த அசைவ உணவுகளில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது முட்டைதான்? விலை குறைவான அதேசமயம் மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவென்றால் அது முட்டைதான். முட்டையில் போதுமான அளவு புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது. வாரத்திற்கு இரண்டு முறையாவது முட்டை சாப்பிடுவது ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். உங்கள் வீட்டில் அடிக்கடி முட்டை செய்வீர்களா?
எப்பொழுதும் முட்டையை வேக வைத்தோ, ஆம்லெட் போட்டோ, ஆப்பாயில் போட்டோ அல்லது வறுத்தோ சாப்பிடுகிறீர்களா? ஒரே மாதிரி முட்டை செய்து போராடிக்கிறதா? ஆம் எனில் நாங்கள் கூறும் இந்த வித்தியாசமான முறையில் முட்டை பொரியலை செய்து பாருங்கள். முட்டையை இந்த மாதிரி பொரியல் செய்து கொடுத்தால் முட்டை சாப்பிடாதவர்கள் கூட அதை விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த பொருளுடன் சேர்த்து முட்டையை பொரியல் செய்யும் போது அதன் ஆரோக்கிய நன்மைகளும் அதிகரிக்கும். அந்த ஆரோக்கியமான பொருள்தான் முருங்கைப்பூ.

உங்களுக்கு முருங்கைப்பூ முட்டை பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைப்பூ முட்டை பொரியலின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- முருங்கைப்பூ - 2 கைப்பிடி அளவு
- சீரகம் - கால் ஸ்பூன்
- முட்டை - இரண்டு
- கறிவேப்பிலை - 1 கொத்து
- சின்ன வெங்காயம் - 15
- பூண்டு - 5 பல்
- கடுகு - அரை ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 3
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- மிளகுத் தூள் - 1 ஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் முருங்கைப்பூவில் காம்பை நீக்கிவிட்டு, சுத்தம் செய்து அலசி வைக்க வேண்டும்.
- பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் மற்றும் பூண்டைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகைப் போட்டு தாளிக்கவும்.
- கடுகு பொரிந்தவுடன் சீரகத்தைப் பொரியவிட்டு, நறுக்கிய பூண்டுச் சேர்த்து வதக்கவேண்டும்.
- பூண்டு லேசாக வதங்கியதும் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவேண்டும்.
- பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவேண்டும்.
- வெங்காயம் சற்று வதங்கியதும் முருங்கைப்பூவைச் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வேக வைக்க வேண்டும்.
- இப்பொழுது முருங்கைப்பூ வெந்து, சிறிது தண்ணீருடன் இருக்கும் போதே முருங்கைப்பூவை நன்கு கிளறிவிட்டு முட்டையை உடைத்து ஊற்றவேண்டும்
- நன்றாக கிளறிவிட்டு முட்டை வெந்து உதிரியாக வந்ததும் மிளகுத்தூள் தூவி நன்கு கிளறி இறக்கி வைக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான முருங்கைப்பூ முட்டை பொரியல் தயார்.



Click it and Unblock the Notifications











