Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..
ஒரு கைப்பிடி முருங்கைக்கீரை இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
Murungai Keerai Chutney Recipe In Tamil: இதுவரை நீங்கள் எத்தனையோ சட்னியை செய்திருப்பீர்கள். ஆனால் முருங்கைக்கீரையைக் கொண்டு சட்னி செய்துள்ளீர்களா? ஆம், முருங்கைக்கீரையைக் கொண்டு அட்டகாசமான சுவையில் சட்னி செய்யலாம்.
இந்த முருங்கைக்கீரை சட்னி இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு முருங்கைக்கீரை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
* முருங்கைக்கீரை - 1 கைப்பிடி
* பச்சை மிளகாய் - 3
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* புளி - 1 சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய் மற்றும் முருங்கைக்கீரை சேர்த்து ஒரு
நிமிடம் வதக்கி இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய்,
முருங்கைகீரை, புளி, மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 1/2 கப்
நீரை ஊற்றி நன்கு அரைத்து, ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன்
சேர்த்து கிளறினால், சுவையான முருங்கைக்கீரை சட்னி தயார்.
குறிப்பு:
* முருங்கைக்கீரையை நீண்ட நேரம் வதக்க வேண்டாம். இல்லாவிட்டால்,
அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக அழிந்துவிடும்.
* வேண்டுமானால், புளிக்கு பதிலாக, எலுமிச்சை சாற்றினை சேர்த்துக்
கொள்ளலாம்.
* விருப்பமுள்ளவர்கள், சிறிது கறிவேப்பிலையை சேர்த்துக் கொண்டால்,
இன்னும் நன்றாக இருக்கும்.
Image Courtesy: indianveggiedelight



Click it and Unblock the Notifications











