Latest Updates
-
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன?
முள்ளங்கி இருந்தா.. இட்லி, தோசைக்கு ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. போட்டி போட்டு சாப்பிடுவாங்க...
Mullangi Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் செய்யப் போகிறீர்களா? அந்த இட்லி, தோசைக்கு வழக்கமாக செய்யும் சட்னியை தான் செய்ய போகிறீர்களா? உங்கள் வீட்டில் முள்ளங்கி உள்ளதா? அப்படியானால் அந்த முள்ளங்கியைக் கொண்டு சட்னி செய்யுங்கள். என்னது, முள்ளங்கியில் சட்னியா என்று கேட்கலாம்.
ஆனால் இந்த முள்ளங்கி சட்னி உண்மையிலேயே பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னியில் முள்ளங்கியின் வாசனையே வராது. அந்த அளவில் இந்த சட்னி ஒரு கார சட்னி போன்று அட்டகாசமாக இருக்கும். வீட்டில் முள்ளங்கி சாப்பிடாதவர்களுக்கு, இப்படி முள்ளங்கி சட்னியை செய்து கொடுத்தால், போட்டி போட்டு காலி செய்வார்கள்.

உங்களுக்கு முள்ளங்கி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முள்ளங்கி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன் + 1 டீஸ்பூன்
* முள்ளங்கி - 150 கிராம் (தோல் நீக்கி நறுக்கியது)
* கருப்பு உளுந்து - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 5
* சின்ன வெங்காயம் - 20
* பூண்டு - 10 பல்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - 1/2 கைப்பிடி
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - சிறிய துண்டு
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் முள்ளங்கியின் தோலை நீக்கிவிட்டு நறுக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், முள்ளங்கியை சேர்த்து, நிறம் மாற வதக்கி, ஒரு
தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் உள்ள எண்ணெயுடன் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து
சூடானதும், கருப்பு உளுத்தம் பருப்பு மற்றும் வரமிளகாய் சேர்த்து
நன்கு வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லியை சேர்த்து வதக்கி,
முள்ளங்கியையும் சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு, புளியை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில்
சிறிது நீரை ஊற்றி அலசி சேர்க்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும்
பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால்,
சுவையான முள்ளங்கி சட்னி தயார்.



Click it and Unblock the Notifications











