Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
இட்லிக்கு இந்த சட்னியை செய்யுங்க.. சட்னிக்காகவே இட்லியை எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
Nellore Kara Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி தான் செய்வீர்களா? பொதுவாக இட்லி என்றால் அதற்கு சட்னி காரமாக இருந்தால் தான் சாப்பிட நன்றாக இருக்கும். அதற்காக எப்போதும் ஒரே மாதிரியான கார சட்னியை செய்து போரடித்துவிட்டதா?
அப்படியானால் ஒருமுறை நெல்லூர் கார சட்னியை செய்யுங்கள். இந்த கார சட்னி காரம், புளிப்பு இரண்டும் கலந்து இருப்பதால், சுவை இன்னும் அருமையாக இருக்கும். சொல்லப்போனால் இந்த சட்னியை செய்தால், இந்த சட்னிக்காகவே வீட்டில் உள்ளோர் அதிகமாக இட்லியை சாப்பிடுவார்கள். மேலும் இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு நெல்லூர் கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நெல்லூர் கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 8-10
* பூண்டு - 15-20 பல்
* சின்ன வெங்காயம் - 10-12
* பெரிய வெங்காயம் - 1
* புளி - சிறிய துண்டு
* தக்காளி - 1
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய் சேர்த்து 1 நிமிடம் வறுத்து,
ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் உள்ள எண்ணெயில் பூண்டு, சின்ன வெங்காயம், பெரிய
வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் புளியை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, தக்காளி
மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வரமிளகாயை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் வதக்கி வைத்துள்ள தக்காளி வெங்காயத்தை சேர்த்து, நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான
அளவு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால்,
சுவையான நெல்லூர் கார சட்னி தயார்.



Click it and Unblock the Notifications