Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
Mullangi Chutney Recipe In Tamil: கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் நிலையில் உணவில் முள்ளங்கியை அதிகம் சேர்ப்பது நல்லது. ஏனெனில் முள்ளங்கி உடல் சூட்டைத் தணிக்கும். ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் முள்ளங்கியை சாப்பிடமாட்டார்களா?
அப்படியானால் அவர்களுக்கு முள்ளங்கியின் சுவையே தெரியாத அளவில் முள்ளங்கியை சமைத்துக் கொடுங்கள். அதற்கு முள்ளங்கியைக் கொண்டு சட்னி தான் செய்ய வேண்டும். இந்த முள்ளங்கி சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

உங்களுக்கு முள்ளங்கி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முள்ளங்கி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* பூண்டு - 10 பல்
* இஞ்சி - 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 10
* சீரகம் - 1 டீஸ்பூன்
* முள்ளங்கி - 3
* தக்காளி - 1
* எலுமிச்சை - 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்)
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் முள்ளங்கியின் தோலை நீக்கிவிட்டு, அதை துருவிக் கொள்ள
வேண்டும். பின் தக்காளியை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பூண்டு, இஞ்சி, வரமிளகாய் சேர்த்து நன்கு வறுத்து,
ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் மீண்டும் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
சீரகம் சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின்பு துருவிய முள்ளங்கியை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி கிளறி, மூடி வைத்து 2-3
நிமிடம் வேக வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, ஒரு எலுமிச்சையின்
சாற்றினை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வதக்கி வைத்துள்ள முள்ளங்கி, தக்காளியை சேர்த்து, நன்கு
மென்மையாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை
சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றி கிளறினால், சுவையான முள்ளங்கி
சட்னி தயார்.
Image Courtesy: Cook With Manali



Click it and Unblock the Notifications











