சுவையான முந்திரி பட்டர் ஸ்மூத்தி எப்படி செய்யலாம்!! செய்யவும் ஈஸி! செம டேஸ்ட்டி!!

Posted By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

மோச்சா முந்திரி பட்டர் ரெசிபி என்பது நிரம்பி வழியும் க்ரீமுடன் இனிப்பு மற்றும் உப்பும் சேர்ந்த சுவையுடன் மோச்சா ப்ளேவருடன் காணப்படும் டேஸ்டியான யம்மியான ரெசிபி ஆகும். இதை காபி, சாக்லேட் மற்றும் முந்திரி பருப்பு இப்படி எல்லா ப்ளேவரைக் கொண்டு எளிதாக செய்து ருசிக்கலாம்.

Mocha Cashew Butter Recipe

நீங்கள் உங்கள் நியூ இயர் பண்டிகையின் காலையை இந்த ஆரோக்கியமான ரெசிபியுடன் கொண்டாடலாம். இதை மார்னிங் ஸ்மூத்தியாகவும் பயன்படுத்தலாம்.

உங்கள் நியூ இயர் ஸ்பெஷலை இந்த கோக்கோ மோச்சா முந்திரி பட்டர் ரெசிபியுடன் கொண்டாட நீங்கள் தயாரா. அப்போ செஃப் அனில் தகியா மற்றும் பிரிஸ்டோல் குருகிராம் ரெசிபி உங்களுக்காக காத்திருக்கு.

மோச்சா முந்திரி பட்டர்
Prep Time
10 Mins
Cook Time
20M
Total Time
30 Mins

Recipe By: செஃப் அனில் தகியா

Recipe Type: குளிர் பானம்

Serves: 4

Ingredients
 • உப்பு சேர்க்கப்பட்ட முந்திரி பருப்பு - 3 கப்

  மென்மையான வெண்ணெய் - 1/2 கப்

  அரை இனிப்பு சாக்லேட் சிப்ஸ் - 1/2 கப்

  உடனடி காபி பொடி - 2 டேபிள் ஸ்பூன்

  தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்

Red Rice Kanda Poha
How to Prepare
 • ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து கொள்ளவும்

  அதில் முந்திரி பருப்பை போடவும்

  நன்றாக முந்திரி பருப்பை அரைக்கவும்

  எல்லா முந்திரி பருப்பும் நன்றாக அரைக்கப்பட்டு இருக்க வேண்டும்

  பிறகு அதனுடன் அரை பங்கு வெண்ணெய்யை சேர்க்க வேண்டும்

  பிறகு மிக்ஸி சாரை மூடியை கொண்டு மூடி மறுபடியும் அரைக்க வேண்டும்.வலுவலுவென அரைக்க வேண்டும்.

  இப்பொழுது இந்த கலவையை ஒரு பெளலிற்கு மாற்றி விடவும்

  பிறகு ஒரு சிறிய கடாயை எடுக்க வேண்டும்

  அந்த கடாயில் காபி பொடி, சாக்லேட் சிப்ஸ் போன்றவற்றை சேர்க்கவும்

  மீதமுள்ள வெண்ணெய்யை இதனுடன் சேர்க்கவும்

  பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்க்கவும்

  பிறகு எல்லா பொருட்களையும் நன்றாக மிதமான தீயில் கலக்க வேண்டும்

  இப்பொழுது அரைத்த முந்திரி பருப்பை சேர்க்கவும்

  நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்

  பிறகு அதன் மேல் முந்திரி பருப்பை தூவி அலங்கரிக்கவும்

  பிறகு அதை ஒரு தட்டிற்கு மாற்றி விடவும்

  பிறகு அதை பிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது எடுத்து குடிக்கலாம்.

  யம்மியான டேஸ்டியான மோச்சா முந்திரி பட்டர் ரெசிபி ரெடி

Instructions
Nutritional Information
 • பரிமாறும் அளவு - 1 பெளல்
 • கலோரிகள் - 6080 கலோரிகள்
 • கொழுப்பு - 544 கிராம்
 • கார்போஹைட்ரேட் - 288 கிராம்
 • சுகர் - 32 கிராம்
 • நார்ச்சத்து - 32 கிராம்
[ 4 of 5 - 77 Users]
Story first published: Thursday, December 28, 2017, 16:00 [IST]