Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
வாய்ப்புண், அல்சரை சரிசெய்யும் மணத்தக்காளி கீரை தண்ணி சாறு - எப்படி செய்யணும் தெரியுமா?
Manathakkali Keerai Thanni Saru Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி கீரை செய்வீர்களா? ஆனால் வீட்டில் இருப்பவர்கள் அந்த கீரையை விரும்பி சாப்பிடமாட்டார்களா? அதுவும் மணத்தக்காளி கீரை என்றால் தொடக்கூடமாட்டார்களா? அப்படியானால் அடுத்தமுறை மணத்தக்காளி கீரையை வாங்கினால், அதைக் கொண்டு தண்ணி சாறு செய்யுங்கள்.
இப்படி மணத்தக்காளி கீரை தண்ணி சாறு செய்யும் போது, அது வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆகியவற்றை சரிசெய்யும். இந்த தண்ணி சாறு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். ஒருவேளை உங்கள் வீட்டில் உள்ளோர் இதை சாப்பிட மறுத்தால், அதன் ஜூஸை மட்டும் வடிகட்டி சூப் போன்று எடுத்துக் கொடுங்கள். இப்படி வாரம் ஒருமுறை செய்து சாப்பிட்டால், சீக்கிரம் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.

உங்களுக்கு மணத்தக்காளி கீரை தண்ணி சாற்றினை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மணத்தக்காளி கீரை தண்ணி சாறு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மணத்தக்காளி கீரை - 1 கட்டு
* அரிசி ஊற வைத்த தண்ணீர் - 2 கப்
* துருவிய தேங்காய் - 2 மூடி
* வெதுவெதுப்பான நீர் - 1/2 கப்
* எண்ணெய் - 1 1/4 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 8
* வரமிளகாய் -2 (விதைகளை நீக்கியது)
* சின்ன வெங்காயம் - 15 (நறுக்கியது)
* பூண்டு - 8 பல்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 3/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மணத்தக்காளி கீரையின் இலைகளை மட்டும் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் அந்த கீரையை நீரில் கழுவி, நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் சமையலுக்கு அரிசியை ஊற வைத்திருந்தால், அந்த ஊற வைத்த
அரிசி நீரை வடிகட்டி 2 கப் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் துருவிய தேங்காயை சேர்த்து, அத்துடன் 1/2 கப்
வெதுவெதுப்பான நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்து, அதை வடிகட்டி
தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/4 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், வெந்தயம், சீரகம், மிளகு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் விதைகளை நீக்கிய வரமிளகாயை சேர்த்து, அத்துடன்
சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள மணத்தக்காளி கீரையை சேர்த்து
கிளறி, கீரை சுருங்கும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அரிசி ஊற வைத்த நீரை ஊற்றி கிளறி, உப்பு சேர்த்து 10
நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அடுப்பை அணைத்துவிட்டு, அதில் தேங்காய் பாலை ஊற்றி கிளறினால்,
சுவையான மணத்தக்காளி கீரை தண்ணி சாறு தயார்.



Click it and Unblock the Notifications











