கையேந்தி பவன் மல்லி சட்னி.. எப்படி செய்றது.ன்னு பாருங்க.. இட்லி, தோசைக்கு சும்மா அள்ளும்...

Posted By:

Kothamalli Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் கொத்தமல்லி அதிகமாக உள்ளதா? அந்த கொத்தமல்லியைக் கொண்டு சட்னி செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் கையேந்தி பவன் ஸ்டைலில் மல்லி சட்னியை செய்யுங்கள். இந்த சட்னியின் ஸ்பெஷலே இதில் தேங்காய் எதுவும் சேர்க்கத் தேவையில்லை. மேலும் இந்த சட்னி செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும். வேலைக்கு செய்பவர்கள், இந்த சட்னியை 10 நிமிடத்தில் செய்துவிடலாம். அந்த அளவில் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு கையேந்தி பவன் கொத்தமல்லி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கையேந்தி பவன் கொத்தமல்லி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Kothamalli Chutney How To Make a Green Coriander Chutney

தேவையான பொருட்கள்:

* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* பூண்டு 10 பல்
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* புளி - சிறிய துண்டு
* கொத்தமல்லி - 1/2 கட்டு
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1/4 வாசி
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், பூண்டு பற்களை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, பெருங்காயத் தூளை தூவி, நன்கு வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் புளி மற்றும் கொத்தமல்லியைத் தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொட்டுக்கடலையை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்துதாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கையேந்தி பவன் கொத்தமல்லி சட்னி தயார்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion