Latest Updates
-
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
இட்லிக்கு கொத்தமல்லி சட்னியை ஒருவாட்டி இந்த மாதிரி அரைச்சுப் பாருங்க.. வேற வெலல் டேஸ்ட்-ல இருக்கும்..
Kothamalli Chutney Using Coconut In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி தான் செய்யப் போகிறீர்களா? அந்த இட்லிக்கு வழக்கமாக அரைக்கும் சட்னியைத் தான் செய்யப் போகிறீர்களா? அதுவும் கொத்தமல்லி சட்னியை செய்ய திட்டமிட்டிருந்தால், அதை இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஸ்டைலில் செய்து பாருங்கள்.
இப்படி சட்னியை செய்யும் போது, உங்கள் வீட்டில் உள்ளோர் கணக்கில்லாமல் இட்லியை சாப்பிடுவார்கள். அந்த அளவில் சட்னியின் சுவை அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னி செய்வதற்கு நிறைய பொருட்கள் தேவையில்லை மற்றும் இது செய்வதற்கும் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு கொத்தமல்லி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொத்தமல்லி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 4 (துண்டுகளாக்கப்பட்டது)
* புளி - சிறிய துண்டு
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பை சேர்த்து
பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாயை சேர்த்து, பச்சை மிளகாய் வெள்ளையாகும் வரை
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் புளி மற்றும் ஒரு கைப்பிடி கொத்தமல்லியை சேர்த்து,
இலைகள் சுருங்கும் வரை ஒரு 1 நிமிடம் வதக்கி, அடுப்பை அணைத்துவிட
வேண்டும்.
* பின்னர் அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறி, வதக்கிய
பொருட்களை நன்கு குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து சிறிது நீரைத் தெளித்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, சிறிது
நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். அதிக நீரை ஊற்றிவிட வேண்டாம்.
* இறுதியாக தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய்
சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால் சுவையான கொத்தமல்லி
சட்னி தயார்.



Click it and Unblock the Notifications











