Latest Updates
-
கோவை ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க -
வருடத்திற்கு 2 ரயில்கள் மட்டுமே வரும் இந்தியாவின் மிகவும் வினோதமான ரயில் நிலையம் எது தெரியுமா? -
40 வயதிற்கு மேல் ஒன்றாக சேர்த்து சாப்பிட வேண்டிய சைவ மற்றும் அசைவ உணவுகள்! - பட்டியலிடும் டாக்டர்! -
இந்த 5 ராசிக்காரங்க யார் பொய் சொன்னாலும் ஈஸியா கண்டுபிடிக்கும் அசாத்திய புத்திசாலிகளாம் -
12 ஆண்டுகள் கழித்து குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும்? -
உடல் எடையை குறைக்க உதவும் ஆம்லெட் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க! -
இன்றைய ராசிபலன் 03 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு சோதனையான நாளாக இருக்குமாம்...! -
சனிபகவான்-புதனின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
அட்டகாசமான சேலம் ஸ்டைல் கதம்ப சட்னி ரெசிபி -
செஃப் தீனா பகிரும் செட்டிநாடு பேமஸ் உக்கரை ரெசிபி
கொங்குநாடு ஸ்பெஷல் தட்டைப்பயறு சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
Kongunadu Thattapayaru Sadam Recipe in Tamil: தினமும் மதியம் என்ன சமைப்பது என்பதுதான் பெரும்பாலான குடும்பத் தலைவிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாகும். பெரும்பாலும் உங்கள் குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸிற்கு வெரைட்டி ரைஸ் செய்து கொடுக்க நினைப்பீர்களா? பொதுவாக குழந்தைகளுக்கு தக்காளி சாதம், லெமன் சாதம் போண்றவற்றைத்தான் மதிய உணவாக செய்து கொடுப்பார்கள். ஆனால் எவ்வளவு நாள்தான் இதுபோன்ற சாதங்களைத்தான் செய்து கொடுப்பது.
குழந்தைகளுக்கு புதிதாக ஏதாவது அதேசமயம் ஆரோக்கியமான சாதத்தை செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த தட்டைப்பயறு சாதத்தை செய்து ஒருமுறை செய்து கொடுங்கள். தட்டை பயறு புரதச்சத்து நிறைந்ததாக இருப்பதால் இது குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானதாகவும், அதேசமயம் மிகவும் சுவையானதாகவும் இருக்கும். இந்த தட்டைப்பயிறு சாதம் கொங்கு பகுதிகளில் மிகவும் பிரபலமானதாகும். நீங்களும் இதை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.

உங்களுக்கு கொங்குநாடு தட்டைப்பயறு சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்குநாடு தட்டைப்பயறு சாத ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் அரிசி
- 2 கப் தண்ணீர்
- ½ கப் தட்டைப் பயறு
- 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- சிறிதளவு கறிவேப்பிலை
- 1 பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
- 1 தக்காளி (பொடியாக நறுக்கியது)
- ஒன்றரை ஸ்பூன் சாம்பார் தூள்
- ½ ஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
- சிறிதளவு கொத்தமல்லி இலை
- 10 சின்ன வெங்காயம்
- 4 பூண்டு பல்
- 1 ஸ்பூன் சோம்பு
செய்முறை:
- சின்ன வெங்காயம், பூண்டுப் பல் மற்றும் சோம்பை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக விழுதாக அரைக்கவும்.
- தட்டைப் பயறை 4-5 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
- தண்ணீரை வடித்துவிட்டு, அதைத் தனியாக எடுத்து வைக்கவும்.
- அரிசியைக் கழுவி, தனியாக எடுத்து வைக்கவும். சீரக சம்பா அரிசியை பயன்படுத்தினால் சுவை அருமையாக இருக்கும்.
- ஒரு பிரஷர் குக்கரில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
- கடுகு வெடித்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடி போன்ற பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- பின்னர் அரைத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் பூண்டு விழுதை இதனுடன் சேர்க்கவும். இதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து கிளறவும்.
- ஒரு நிமிடத்திற்குப் பிறகு, சாம்பார் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- நன்கு கலந்து, தக்காளிகள் நன்றாக வேகும் வரை சமைக்கவும்.
- பின்னர் ஊறவைத்த தட்டைப்பயறை சேர்த்து அதில் உள்ள நீரை வடித்துவிட்டுச் சேர்த்து நன்றாக கிளறவும்.
- இப்போது கழுவி வைத்திருக்கும் அரிசியைச் சேர்க்கவும்.
- பின்னர் 2 கப் தண்ணீரை சேர்க்கவும். நீங்கள் பயன்படுத்தும் அரிசியின் வகைக்கு ஏற்ப நீரின் அளவை மாற்றிக்கொள்ளவும்.
- உப்பின் அளவை சரிபார்த்து பிரஷர் குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- குக்கரில் உள்ள அழுத்தம் தானாகவே வெளியேறியதும், குக்கரைத் திறக்கவும். பிரஷர் குக்கரை மீண்டும் சிறிது நேரம் மூடி வைக்கவும்.
- சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்து கிளறினால் சுவையான கொங்குநாடு தட்டைப்பயறு சாதம் தயார்.



Click it and Unblock the Notifications











