Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
உடலுக்கு வலு சேர்க்கும் கொள்ளு பருப்பு மசியல் - எப்படி ஈஸியா செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
Kollu Paruppu Masiyal Recipe In Tamil: மதிய வேளையில் எப்போதும் சாம்பார், புளிக்குழம்பு என்று செய்து போரடித்துவிட்டதா? சிம்பிளாக, அதே சமயம் சுவையாக சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கொள்ளு பருப்பு உள்ளதா? அப்படியானால் அந்த கொள்ளு பருப்பைக் கொண்டு மசியல் செய்யுங்கள்.
இந்த கொள்ளு பருப்பு மசியலை சூடான சாதத்துடன் சேர்த்து, நெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால், சுவை வேற லெவலில் இருக்கும். அதுவும் இந்த கொள்ளு மசியலை வாரத்திற்கு ஒருமுறை உட்கொண்டு வந்தால், உடல் வலுவோடு இருக்கும். குழந்தைகளுக்கு கொள்ளு பருப்பை அதிகம் கொடுப்பது, அவர்களின் உடலுக்கு வலு சேர்க்கும்.

உங்களுக்கு கொள்ளு பருப்பு மசியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொள்ளு பருப்பு மசியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கொள்ளு - 1 கப்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 5 பல்
* பச்சை மிளகாய் - 4
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி - 2 (நறுக்கியது)
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 6 பல் (தட்டியது)
* சின்ன வெங்காயம் - 10
செய்முறை:
* முதலில் கொள்ளு பருப்பை நீரில் 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* 3 மணிநேரம் கழித்து, குக்கரில் ஊற வைத்த கொள்ளு பருப்பை கழுவி
சேர்த்து, அத்துடன் 2 கப் நீரை ஊற்றி, 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1
டீஸ்பூன் சீரகம், 1 டேபிள் ஸ்பூன் வரமல்லி, 5 பூண்டு பற்கள், 4 பச்சை
மிளகாய், சுவைக்கேற்ப உப்பு மற்றும் நறுக்கிய 2 தக்காளியை சேர்த்து,
குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4-5 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கொள்ளு பருப்பை மத்து கொண்டு
மசித்து விட வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு 1
டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், 1 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு,
1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூள், 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* அடுத்து அதில் தட்டி வைத்துள்ள 6 பூண்டு பற்கள் மற்றும் 10 சின்ன
வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் மசித்து வைத்துள்ள கொள்ளு பருப்பை சேர்த்து கிளறி,
இறக்கினால், சுவையான கொள்ளு பருப்பு மசியல் தயார்.



Click it and Unblock the Notifications











