கேரளா ஸ்டைல் தேங்காய் சட்னி ரெசிபி..இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்...!

Posted By:

Kerala Coconut Chutney Recipe in Tamil: இட்லி, தோசை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது தேங்காய் சட்னிதான். தென்னிந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமே இட்லி, தோசை என்றால் அதற்கு பெரும்பாலும் தயாரிக்கப்படும் எளிதான மற்றும் சுவையான சைடிஷ் என்றால் அது தேங்காய் சட்னிதான். சூடான இட்லிக்கு காரமான தேங்காய் சட்னி எப்போதுமே அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும்.

ஒவ்வொரு பிராந்தியத்திற்க்கும் தேங்காய் சட்னி தயாரிக்கும் விதம் மாறுபடும். வடஇந்தியாவில் தேங்காய் சட்னியில் பொதுவாக தயிர் சேர்க்கப்படும். அதேபோல ஒவ்வொரு பகுதியிலும் அந்த பகுதிக்கு ஏற்ப சட்னி அரைக்கும் முறை மாறுபடும். அந்த வகையில் கேரளாவுக்கென ஒரு வித்தியாசமான தேங்காய் சட்னி உள்ளது.

Kerala Coconut Chutney Recipe How to Make Kerala Coconut Chutney

உங்களுக்கு சுவையான கேரளா ஸ்டைல் தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா ஸ்டைல் தேங்காய் சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- துருவிய தேங்காய் - முக்கால் கப்
- வரமிளகாய் - 5 (தேவைக்கேற்ப)
- சின்ன வெங்காயம் - 5
- இஞ்சி - 1 அங்குலத் துண்டு
- புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு

தாளிக்க:

- தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- வரமிளகாய் - 1
- நறுக்கிய சின்ன வெங்காயம் - 3

செய்முறை:

- முதலில் தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும், சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.

- ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், வர மிளகாய், சின்ன வெங்காயம், இஞ்சி, புளி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

- பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, வழவழப்பான விழுதாக அரைக்கவும். பின்னர் சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.

- சட்னியை தாளிக்க சின்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொண்டு, ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயைக் காய வைக்கவும்.

கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்துத் தாளிக்கவும். வெங்காயம் கண்ணாடி போல ஆகும் வரை வதக்கவும்.

- இதை சட்னி இருக்கும் கிண்ணத்தில் சேர்க்கவும். நன்றாகக் கலந்து, சூடான இட்லி, தோசையுடன் பரிமாறவும். கூடுதல் சுவைக்கு நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடவும்.

- மிளகாயை உங்களின் காரத்திற்கு ஏற்ப சரி செய்து கொள்ளவும், சின்ன வெங்காயம் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டாம். ஒருவேளை சின்ன வெங்காயம் இல்லையென்றால் பாதி பெரிய வெங்காயத்தை பயன்படுத்தவும்.

- இஞ்சியை மிகவும் குறைவாக பயன்படுத்துவது நல்லது.

[ of 5 - Users]
Story first published: Friday, December 26, 2025, 22:00 [IST]
Desktop Bottom Promotion