Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
10 பல் பூண்டும், ஒரு துண்டு இஞ்சியும் இருந்தா இந்த சூப்பர் சட்னியை அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்!
Ginger Garlic Chutney Recipe in Tamil: தினமும் இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என்று ஒரே மாதிரி சட்னி செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சட்னியை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? வீட்டில் இஞ்சி மற்றும் பூண்டு உள்ளதா? அப்படியானால் இந்த ஆரோக்கியமான இஞ்சி பூண்டு சட்னியை செய்யுங்கள்.
இந்த இஞ்சி பூண்டு சட்னியானது மழைக்காலத்தில் செய்து சாப்பிட ஏற்றது. ஏனெனில் இஞ்சியில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளன. மழைக்காலத்தில் அதிகமாக உணவில் சேர்க்கும் போது, நோயெதிர்ப்பு சக்தி வலுவடைந்து, அடிக்கடி நோய்வாய்ப்படுவதைத் தடுக்கலாம். அதுமட்டுமின்றி இந்த இஞ்சி பூண்டு சட்னி ஆரோக்கியமானது மட்டுமின்றி சுவையானதாகவும் இருக்கும்.

உங்களுக்கு இஞ்சி சனியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இஞ்சி பூண்டு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- பூண்டு - 15
- இஞ்சி - ஒரு பெரிய துண்டு
- தேங்காய் - அரை மூடி
- கறிவேப்பிலை - 1 கொத்து
- வரமிளகாய் - 3
- புளி - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
வறுக்க:
- கடுகு - அரை ஸ்பூன்
- சீரகம் - அரை ஸ்பூன்
- வெந்தயம் - அரை ஸ்பூன்
- மல்லி விதை - ஒரு ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
தாளிக்க:
- கடுகு - அரை ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - அரை ஸ்பூன்
- கடலைப்பருப்பு - அரை ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- முதலில் தேவையான பொருட்களை அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவும். புளியை ஊற வைத்துக் கொள்ளவும்
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் மற்றும் வெந்தயத்தை போட்டு தாளிக்கவும். பின்னர் மல்லி விதை, உளுத்தம் பருப்பு மற்றும் பெருங்காயத்தை சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
- இந்த கலவை நன்கு ஆறியதும் தேங்காய், புளி, இஞ்சி மற்றும் பூண்டோடு சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.
- இதை அப்படியே சாப்பிடலாம், இல்லையெனில் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து தாளித்து சட்னி மீது ஊற்றவும்.
- மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இஞ்சி பூண்டு சட்னி ரெடி. இது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
- வாயுப்பிரச்சினை அல்லது வேறு காரணத்தாலோ வயிறு தொல்லை உள்ளவர்களுக்கு இந்த சட்னி மிகவும் நல்லது.
- பசியின்மை, வாந்தியின் அறிகுறி, நீண்ட பயணம் மற்றும் நீண்ட நேரம் இரவில் விழிப்பதால் வயிற்றிலும், வாயிலும் ஏற்படும் ஒருவித ஒவ்வாமைக்கு இந்த சட்னி சிறந்த தீர்வாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











