Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
பருப்பு சேர்க்காம இட்லிக்கு சாம்பார் செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
Idli Sambar Without Dal Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி செய்யப் போகிறீர்களா? அந்த இட்லிக்கு ஒரு அருமையான அதே சமயம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் ஒருமுறை பருப்பு சேர்க்காத ரோட்டுக்கடை தக்காளி சாம்பாரை செய்யுங்கள்.
இந்த சாம்பார் இட்லியுடன் மட்டுமின்றி தோசையுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாக இருக்கும் மற்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு பருப்பு சேர்க்காத ரோட்டுக்கடை தக்காளி சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பருப்பு சேர்க்காத ரோட்டுக்கடை தக்காளி சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 10 பல்
* வெங்காயம் - 1
* வரமிளகாய் - 3
* பச்சை மிளகாய் - 2
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது)
* சாம்பார் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து சாம்பார் தூள் சேர்த்து, 2 நிமிடம் பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின்பு பொட்டுக்கடலையை சேர்த்து ஒருமுறை கிளறி இறக்கி குளிர வைத்து,
மிக்சர் ஜாரில் போட்டு சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு பற்களை தட்டிப் போட்டு, வரமிளகாய், பச்சை மிளகாய்
மற்றும் வெங்காயத்தை சேர்த்து சற்று நிறம் மாற வதக்க வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து கிளறி, தேவையான
அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, 10 நிமிடம்
கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான பருப்பு சேர்க்காத ரோட்டுக்கடை
தக்காளி சாம்பார் தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications











