மட்டன் கைமா இடியாப்ப பிரியாணி.. இதை குழந்தைகளுக்கு டின்னருக்கு செஞ்சு கொடுங்க..மிச்சம் வைக்காம சாப்பிடுவார்கள்

Posted By:

இடியாப்பம் குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்றாகும். சிலர் வீட்டிலேயே சிரமம் பார்க்காமல் அரிசியை அரைத்தோ, ஆட்டியோ இடியாப்பம் செய்வார்கள்.. ஆனால் தற்போது உள்ள அவசர காலத்தில் நேரமின்மை காரணமாக கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் இடியாப்பம் வாங்கி பயன்படுத்துகின்றனர்.

இந்த இடியாப்பத்தில் மணக்கும் மட்டன் போட்டு பிரியாணி டேஸ்டில் மட்டன் கைமா இடியாப்பம் செய்யலாம். வாங்க அதன் ரெசிபி குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்..

தேவையான பொருள்கள்

1. இடியாப்பம்

2. மட்டன் கைமா

3. மஞ்சள் தூள்

4. இஞ்சி - பூண்டு விழுது

5. மிளகாய்த்தூள்

6. பச்சை மிளகாய்

7. பெரிய வெங்காயம்

8. தக்காளி

9. கரம் மசாலா

10. கொத்துமல்லித் தழை

11. எலுமிச்சை

12. கறிவேப்பிலை

13. எண்ணெய்

14. உப்பு

how to make mutton Kaima Idiyappam Biryani here the recipe

செய்முறை:
1. முதலில் வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

2. பிறகு இடியாப்பத்தை உதிர்த்துக் கொள்ளவும்.

3. எண்ணெயில் கரம் மசாலா, வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு நன்கு வதக்கவும்.

4. இப்போது மேற்கண்டவற்றுடன் இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு ஆகிய இவற்றை எல்லாம் சேர்க்கவும்.

5. இந்தக் கலவையை நன்கு கிளறி அதனுடன் கைமா கறியையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

6. இவற்றுடன் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்துக், குக்கரில் 3 விசில் வைக்கவும்.

7. மேற்கண்ட கலவை நன்கு கொதித்ததும், உதிர்த்து வைத்துள்ள இடியாப்பத்தை அதனுடன் சேர்த்துக் கிளறி, உடன் எலுமிச்சை சாறு சேர்த்துக், கொத்துமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் இரத்த சோகையை மட்டன் சரிச்செய்யும்.. எனவே கருவுற்ற தாய்மார்கள் மட்டனை சாப்பிட்டால் அதில் உள்ள இரும்பு சத்து ஹீமோ குளோபின் அளவை அதிகரித்து உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. இதனால், கருப்பையில் உள்ள கருவுக்கும் இரத்த ஓட்டம் சீராக செல்ல வழி வகுக்கும். அதனால் இந்த மட்டன் கைமா இடியாப்ப பிரியானியை இன்னைகே உங்கள் வீட்டில் ட்ரை பணுங்கள்.. டின்னருக்கு சூப்பராக இருக்கும்..

[ of 5 - Users]
Desktop Bottom Promotion