Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
சுரைக்காய் வாங்குனா.. இந்த பக்குவத்துல கூட்டு செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு டக்கரா இருக்கும்...
Surakkai Kootu Recipe In Tamil: மதியம் சிம்பிளா அதிகம் மெனக்கெடாம சமையலை முடிக்க நினைக்கிறீங்களா? உங்கள் வீட்டில் சுரைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த சுரைக்காயைக் கொண்டு கூட்டு செய்யுங்கள். அதுவும் குக்கரில் 10 நிமிடத்தில் செய்யுங்கள். இந்த பக்குவத்தில் சுரைக்காய் கூட்டு செய்யும் போது, அது சூடான சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
மேலும் இந்த சுரைக்காய் கூட்டு செய்வதற்கு ஈஸியாக இருப்பதால், பேச்சுலர்களும் இதை செய்யலாம். முக்கியமாக இந்த கூட்டு நீங்கள் வழக்கமாக செய்வதை விட சற்று வித்தியாசமான சுவையில் இருப்பதால், சுரைக்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு சுரைக்காய் கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுரைக்காய் கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசிப்பருப்பு - 1/2 கப் (100 கிராம்)
* துவரம் பருப்பு - 1/4 கப்
* சுரைக்காய் - 1/4 கிலோ (சதுர துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1
* பச்சை மிளகாய் - 3
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* பூண்டு - 7 பல் (தட்டியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பு மற்றும் துவரம் பருப்பை நீரில் 2 முறை
கழுவி விட்டு, பின் சிறிது நீரை ஊற்றி, 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து குக்கரில் ஊற வைத்த பருப்பை நீரை வடிகட்டிவிட்டு
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் துண்டுகளாக்கி வைத்துள்ள சுரைக்காயை சேர்க்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீறி
வைத்துள்ள பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், காய்கறி மூழ்கும் அளவில் நீரை ஊற்றி,
குக்கரை அடுப்பில் வைத்து, குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 4
விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கரண்டியால் கிளறி விட
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு பற்களை தட்டி சேர்த்து, கறிவேப்பிலை தூவி
தாளித்து, குக்கரில் உள்ள கூட்டுடன் சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கொத்தமல்லி தூவி,
பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி, குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து
1 கொதி விட்டு இறக்கினால், சுவையான சுரைக்காய் கூட்டு தயார்.



Click it and Unblock the Notifications











