Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...!
வீட்ல அரை கப் கோதுமை ரவை இருக்கா... அப்ப இந்த மாதிரி பணியாரம் செஞ்சு பாருங்க... டேஸ்ட் தாறுமாறா இருக்கும்...!
Godhumai Rava Paniyaram Recipe in Tamil: எப்போதும் காலையில இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்று சாப்பிட்டு போராடித்து விட்டதா? இதைவிட்டால் சில சமயம் பொங்கல் செய்வோம். காலை உணவு என்றாலே இவை மட்டும்தான் என்ற நிலை வந்துவிட்டது. சற்று வித்தியாசமாக அதே சமயம் சத்தான ஒரு காலை உணவைசெய்ய ஆசைப்படுகிறீர்களா? உங்கள் வீட்டில் அரை கப் கோதுமை ரவையும், உளுந்தம் பருப்பும் இருந்தால் போதும்.
அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு ஒரு அட்டகாசமான சுவையைக் கொண்ட பணியாரத்தை செய்யுங்கள். இந்த ரவை பணியாரம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும், அதேசமயம் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். முக்கியமாக இதை மாலை நேர ஸ்னாக்ஸாகவும் சாப்பிடலாம். கோதுமை ரவையில் பணியாரம் செய்வது சுவையானதாக மட்டுமின்றி ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இந்த பதிவில் சுவையான ரவை பணியாரத்தை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- கோதுமை ரவை - 1/2 கப்
- உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்
- வெந்தயம் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- பெரிய வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 2
- கடுகு - 1/4 ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
- எண்ணெய் - 3 ஸ்பூன்
செய்முறை:
- வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- கோதுமை ரவை, உளுந்து, வெந்தயத்தை 3 மணி நேரம் ஊற வைத்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- உப்பு சேர்த்து கலக்கி 2 மணி நேரம் புளிக்க விடவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- பிறகு நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியவுடன் இந்த கலவையை மாவில் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
- பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் சேர்த்து மாவை சேர்க்கவும்.
- மிதமான தீயில் வைத்து வேக விடவும். ஒருபுறம் வெந்ததும் திருப்பி விடவும். இரண்டுபுறமும் வெந்தவுடன் சூடாக தேங்காய் சட்னி அல்லது கார சட்னியுடன் பரிமாறவும்.
- சூப்பரான கோதுமை ரவை குழிப்பணியாரம் ரெடி!



Click it and Unblock the Notifications











