Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வரகரிசியும், வாழைப்பழமும் இருந்தா இந்த ஆரோக்கியமான பணியாரத்தை செய்யுங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
பார்லர் போகாமலேயே முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? இந்த 5 ஃபேஸ் பேக்கை போடுங்க போதும்..
எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
Fire Roasted Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்ய போகிறீர்களா? அதற்கு எப்போதும் ஒரே மாதிரியாக தான் சட்னியை செய்வீர்களா? அப்படியானால் இன்று சற்று வித்தியாசமான ருசியைக் கொண்ட சட்னியை செய்யுங்கள். அதாவது சட்னிக்கு உரிய வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை நெருப்பில் சுட்டு, அதன் பின் சட்னி செய்யுங்கள். இப்படி சுட்டு சட்னியை செய்யும் போது, அதன் சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.
உங்களுக்கு தீயில் சுட்ட சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தீயில் சுட்ட சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* பெரிய தக்காளி - 1
* வெங்காயம் - 2
* முழு பூண்டு - 1
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 5
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு....
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் அடுப்பில் சப்பாத்தி சுடும் க்ரில் ஸ்டேண்ட்டை வைக்க
வேண்டும்.
* பின் அதன் மேல் வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை வைத்து,
திருப்பி திருப்பி வைத்து நன்கு சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அவற்றை நன்கு குளிர வைத்து, அவற்றின் தோலை நீக்கிவிட்டு,
நீரில் ஒருமுறை அலசிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அந்த காய்கறிகளை ஒன்றிரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து
பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் சுட்ட வெங்காயம்,
தக்காளி, பூண்டை சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* அடுத்து வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, அரைத்த சட்னியை ஊற்றி, சிறிது நீர் சேர்த்து நன்கு கலந்து,
2 நிமிடம் கிளறி இறக்கினால், சுவையான தீயில் சுட்ட சட்னி தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications