Latest Updates
-
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...!
சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும்... மணமணக்கும்... எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
Ennai Kathirikai Kulambhu Recipe In Tamil: ஒவ்வொரு நாளும் மதிய வேளையில் என்ன சமைப்பது என்று தெரியாமல் இருப்பீர்களா? அப்படியானால் ஒரு நாள் மதிய வேளையில் சாதத்துடன் சாப்பிட ஏற்றவாறு ஒரு அட்டகாசமான குழம்பு செய்யுங்கள். அதுவும் உங்கள் வீட்டில் கத்திரிக்காய் இருந்தால், அவற்றைக் கொண்டு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்யுங்கள்.
இந்த குழம்பின் ஸ்பெஷல் ஒரு பொடியைத் தயாரித்து, அதை கத்திரிக்காயினுள் வைத்து, எண்ணெயில் நன்கு வேக வைத்து செய்வது தான். இந்த குழம்பு செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சின்ன கத்திரிக்காய் - 10
* சின்ன வெங்காயம் - 10
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 7-8 பல்
* புளி - 1 எலுமிச்சை அளவு
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தேங்காய் விழுது - 2 டேபிள் ஸ்பூன்
* நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
வறுத்து அரைப்பதற்கு..
* வரமிளகாய் - 5-6
* மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1/4 டீஸ்பூன்
* வெந்தயம் - 6 விதைகள்
தாளிப்பதற்கு...
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 5-6 விதைகள்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, மிளகு,
வெந்தயம், வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர
வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள
வேண்டும்.
* பின் கத்திரிக்காய்களை எடுத்து கழுவிக் கொள்ள வேண்டும். பின்
ஒவ்வொரு கத்திரிக்காயையும் எடுத்து நான்காக கீறி அதனுள் பொடித்து
வைத்துள்ள பொடியை நிரப்பி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு பௌலில் புளியைக் கரைத்து சாறு எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அந்த புளிச்சாற்றில் மல்லித் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள்,
சுவைக்கேற்ப உப்பு மற்றும் தேங்காய் விழுதை சேர்த்து கலந்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை,
பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை
வதக்க வேண்டும்.
* அதன் பின் தக்காளியை சேர்த்து சிறிது உப்பு தூவி, நன்கு
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கத்திரிக்காயை சேர்த்து, மிதமான தீயில் வைத்து
கத்திரிக்காயை வேக வைக்க வேண்டும்.
* கத்திரிக்காயின் நிறம் மாறியதும், அதில் தயாரித்து வைத்துள்ள
புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, பச்சை வாசனை போக கொதிக்க வைத்து
இறக்கினால், சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications











