Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
கோயம்புத்தூர் ஸ்டைல் தக்காளி குழம்பு
உங்களுக்கு கோயம்புத்தூர் பகுதியில் சமைக்கும் சமையல் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் கோயம்புத்தூர் ஸ்டைல் தக்காளி குழம்பை செய்யுங்கள்.
Coimbatore Style Tomato Curry Recipe: தினமும் சாம்பார், புளிக்குழம்பு செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? மதிய வேளையில் என்ன சமைப்பது என்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் தக்காளி உள்ளதா? உங்களுக்கு கோயம்புத்தூர் பகுதியில் சமைக்கும் சமையல் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் கோயம்புத்தூர் ஸ்டைல் தக்காளி குழம்பை செய்பயுங்கள். இந்த தக்காளி குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த தக்காளி குழம்பு செய்வது மிகவும் சுலபம். பேச்சுலர்கள் கூட இந்த ரெசிபியை செய்யலாம்.

உங்களுக்கு கோயம்புத்தூர் ஸ்டைல் தக்காளி குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோயம்புத்தூர் ஸ்டைல் தக்காளி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 1-2
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 3-4
* சின்ன வெங்காயம் - 2-3
* கொத்தமல்லி - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 3-4 கப்
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 1 (நறுக்கியது)
* துருவிய தேங்காய் - 1/4 கப்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பின் அதில் கடலை பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சில நொடிகள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் சோம்பு, சீரகம், மிளகு மற்றும் மல்லி விதைகளை சேர்த்து குறைவான தீயில் வைத்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் வெங்காயத்தைப் போட்டு சிறிது நேரம் வதக்கி, பின் தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும், தேங்காயை சேர்த்து கிளறி 5 நிமிடம் வேக வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு பெரிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி, அரைத்த மசாலாவை சேர்த்து, பின் சாம்பார் தூளை சேர்த்து, 2-3 கப் நீரை ஊற்றி கிளறி, 10-15 நிமிடம் குறைவான தீயில் வைத்து பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான கோயம்புத்தூர் ஸ்டைல் தக்காளி குழம்பு தயார்.
Image Courtesy: cookwithrenu



Click it and Unblock the Notifications












