தேங்காய் சட்னியை ஒருடைம் இந்த மாதிரி அரைங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்...

Posted By:

Coconut Peanut Chutney Recipe In Tamil: ஒவ்வொரு நாளும் காலையில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று முடிவெடுப்பதே பெரிய வேலையாக உள்ளதா? தினமும் ஒரே மாதிரியான சட்னியை சுவைத்து போரத்துவிட்டதா? அதுவும் தேங்காய் சட்னி என்றால் வீட்டில் உள்ளோர் தலைதெறிக்க ஓடுவார்களா? அப்படியானால் அடுத்தமுறை தேங்காய் சட்னியை இந்த மாதிரி ட்ரை செய்யுங்கள். இப்படி சட்னியை செய்யும் போது வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக வீட்டில் உள்ளோர் சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு தேங்காய் வேர்க்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கெள்ள வேண்டுமா? கீழே தேங்காய் வேர்க்கடலை சட்னி ரெசிபியின் எளிய செற்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Coconut Peanut Chutney How To Make a Coconut Peanut Chutney Recipe

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வேர்க்கடலை - 50 கிராம்
* பொட்டுக்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 4
* புளி - சிறிது
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் - 1/2 மூடி
* பெரிய வெங்காயம் - பாதி (நறுக்கியது)

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* பெரிய வெங்காயம் - பாதி (நறுக்கியது)

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வேர்க்கடலையை சேர்த்து மொறுமொறுவென்று வறுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பொட்டுக்கடலை சேர்த்து வறுக்க வேண்டும்.
* அடுத்து அதில் பச்சை மிளகாய் மற்றும் புளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கி அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காய், பாதி பெரிய வெங்காயத்தை மட்டும் எடுத்து பொடியாக நறுக்கி சேர்த்து, அந்த சூட்டில் நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக சட்னியை தாளிக்க ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், வரமிளகாய் மற்றும் பாதி பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு வதக்கி இறக்கி, சட்னியுடன் சேர்த்து கிளறினால் சுவையான தேங்காய் வேர்க்கடலை சட்னி தயார்.

Image Courtesy: SIMPLY SAMAYAL

[ of 5 - Users]
Story first published: Friday, August 23, 2024, 7:00 [IST]
Desktop Bottom Promotion