Just In
- 1 min ago
இந்த சத்து அதிகம் உள்ள ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகமாம்... ஜாக்கிரதை!
- 48 min ago
நீங்கள் சாதாரணமென நினைக்கும் இந்த அறிகுறிகள் ஆபத்தான புற்றுநோயின் அறிகுறியாம்... ஜாக்கிரதை...!
- 1 hr ago
40 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!
- 7 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும்...
Don't Miss
- News
50,000.. 5,000.. 200.. "தலை"க்கு வந்த தலைவலி.. கசிந்த ரகசியம்.. பறந்த ரிப்போர்ட்.. வெளுக்கும் தாமரை
- Sports
2 பக்கமும் நெருக்கடி.. 2வது டி20க்கான ப்ளேயிங் 11ல் குழப்பம்.. விழிப்பிதுங்கி நிற்கும் பாண்ட்யா !!
- Movies
பொங்கல் போட்டிக்கு வாய்ப்பே இல்லையாம்.. அப்போ ஏகே61 ரிலீஸ் அந்த தேதியில் தானா?
- Finance
Gold price: தங்கம் வாங்க இது சரியான நாளா.. இன்று விலை எப்படியிருக்கு?
- Automobiles
புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! இவற்றையும் பொருத்தினால் கார் வேற லெவல்ல மாறிடும்!
- Technology
Vivo V25 இல்ல Vivo V25 Pro-வை வாங்கலாம்னு வெயிட் பண்றீங்களா? டைம் வேஸ்ட்!?
- Travel
என்ன? உலகின் மிகப்பெரிய பறவை சிற்பம் இந்தியாவில் தான் உள்ளதா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
செட்டிநாடு வெள்ளை குருமா
உங்கள் வீட்டில் இன்று இரவு சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் உள்ளோர் நிறைய காய்கறிகளை சாப்பிடும் வகையில் ஒரு ருசியான செட்டிநாடு வெள்ளை குருமா செய்து கொடுங்கள். இந்த குருமா சப்பாத்தி, பூரி, பரோட்டாவிற்கு அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் அளவான காரத்தில் ருசியாக இருக்கும்.
உங்களுக்கு செட்டிநாடு வெள்ளை குருமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு வெள்ளை குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* பட்டை - 1 இன்ச்
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 1
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* காய்கறிகள் - 1 கப் (கேரட், பட்டாணி, பீன்ஸ், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு)
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1 கப்
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 4-5
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 4-5
* கிராம்பு - 1
* ஏலக்காய் - 2
* பட்டை - 1
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பிளெண்டரில் ஒரு கப் துருவிய தேங்காய், பொட்டுக்கடலை, சீரகம், சோம்பு, முந்திரி, கிராம்பு, பட்டை, ஏலக்காய், பச்சை மிளகாய் ஆகியவற்றை எடுத்து, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, காய்கறிகளை சேர்த்து 2-3 நிமிடங்கள் நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், செட்டிநாடு வெள்ளை குருமா தயார்.