Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்
உங்களுக்கு மூளை வறுவல் பிடிக்குமா? ஆனால் அதை சமைக்கத் தெரியாமல் எப்போதும் கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவீர்களா? இனிமேல் அந்த கவலை வேண்டாம். ஏனெனில் ஆட்டு மூளை வறுவலை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்.
நீங்கள் அசைவ பிரியரா? உங்களுக்கு மூளை வறுவல் பிடிக்குமா? ஆனால் அதை சமைக்கத் தெரியாமல் எப்போதும் கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவீர்களா? இனிமேல் அந்த கவலை வேண்டாம். ஏனெனில் ஆட்டு மூளை வறுவலை வீட்டிலேயே எப்படி ஈஸியாக செய்வதென்று கொடுத்துள்ளோம். அதுவும் மிகவும் பிரபலமான செட்டிநாடு ஸ்டைலில் ஆட்டு மூளை வறுவலை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்.

ஆட்டு மூளை வறுவல் செய்வது மிகவும் சுலபம். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு செய்தால், மூளை சாப்பிடாதவர்களும் விரும்பி சாப்பிடுவர். சரி, வாருங்கள் செட்டிநாடு ஸ்டைல் ஆட்டு மூளை வறுவலின் செய்முறையைக் காண்போம். அதைப் படித்து செய்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
MOST READ: மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா
தேவையான பொருட்கள்:
* ஆட்டு மூளை - 1
* சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* மல்லி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 1
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஆட்டு மூளையை நன்கு நீரில் கழுவிக் கொள்ளவும். பின் மூளையில் உள்ள சிவப்பு நரம்புகளை நீக்கிவிட்டு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, மீண்டும் நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு மூளையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* இப்போது மிக்ஸர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, சிறிது நீர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
* பின் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து நறுக்கி வைத்துள்ள மூளையை போட்டு, 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.
* பின்பு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 1/4 கப் நீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும். மசாலாவில் பச்சை வாசனை போனதும், அதேப் போல் நீர் வற்றியதும், கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல் தயார்.
குறிப்பு:
* ஆட்டு மூளை வேகமாக வெந்துவிடும். எனவே நீண்ட நேரம் வேக வைக்க வேண்டிய அவசியம் இருக்காது.
* ஆட்டு மூளை மிகவும் மென்மையாக இருப்பதால், சமைக்கும் போது பார்த்து கையாளுங்கள்.
* மேலே மிதமான அளவில் தான் காரம் சேர்க்கப்பட்டுள்ளது. உங்களுக்கு காரமாக வேண்டுமானால், 2 வரமிளகாய் சேர்த்துக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications











