செட்டிநாடு பாலக்கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாருங்க...

Posted By:

Chettinad Palak Keerai Kootu Recipe In Tamil: கீரை செய்தாலே உங்கள் வீட்டில் உள்ளோர் சரியாக சாப்பிடமாட்டார்களா? அப்படிப்பட்டவர்களை கீரை சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் பாலக்கீரை வாங்கி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செய்யுங்கள்.

இந்த செட்டிநாடு பாலக்கீரை கூட்டு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இப்படி கூட்டு செய்தால், கீரை பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். அதோடு அடிக்கடி செய்து கொடுக்குமாறும் கேட்பார்கள்.

Chettinad Palak Keerai Kootu How To Make a Chettinad Palak Keerai Kootu Recipe

உங்களுக்கு செட்டிநாடு பாலக்கீரை கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு பாலக் கீரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பாசிப்பருப்பு - 50 கிராம்
* துவரம் பருப்பு - 50 கிராம்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 8 பல் (தட்டிக் கொள்ளவும்)
* வரமிளகாய் - 2
* சாம்பார் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* பாலக் கீரை - 1 கட்டு (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் குக்கரில் பாசிப்பருப்பு மற்றும் துவரம் பருப்பை சேர்த்து நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் தக்காளி, பெருங்காயத் தூள், மஞ்சள் தூள் மற்றும் பருப்பு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, குக்கரை அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை நன்கு மசித்து விட வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நிறம் மாற வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தட்டி வைத்துள்ள பூண்டு பற்கள், வரமிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சாம்பார் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கி வைத்துள்ள பாலக்கீரையை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து கிளறி தேவையான அளவு சிறிது நீரை ஊற்றி கலந்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான செட்டிநாடு பாலக்கீரை கூட்டு தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, February 14, 2025, 14:33 [IST]
Desktop Bottom Promotion