Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
மீல் மேக்கரை வெச்சு இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புட்டு செய்யுங்க.. சும்மா அள்ளும்...
Chettinad Meal Maker Puttu: உங்கள் வீட்டில் உள்ளோர் மீல் மேக்கரை விரும்பி சாப்பிடுவார்களா? அதனால் உங்கள் வீட்டில் அடிக்கடி மீல் மேக்கரை சமைப்பீர்களா? இதுவரை நீங்கள் மீல் மேக்கரை பிரியாணியிலும், மசாலா செய்தும் சாப்பிட்டிருக்கலாம்.
ஆனால் அந்த மீல் மேக்கரைக் கொண்டு செட்டிநாடு ஸ்டைலில் அட்டகாசமான சுவையில் புட்டு செய்யலாம் தெரியுமா? இந்த மீல் மேக்கர் புட்டு சாம்பார் சாதத்துடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இந்த புட்டு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் மீல் மேக்கர் புட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு ஸ்டைல் மீல் மேக்கர் புட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீல் மேக்கர் - 20
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* பச்சை மிளகாய் - 2 (இரு துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
* எண்ணெய் - 4 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
மசாலா அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 இன்ச்
* ஏலக்காய் - 1
* கிராம்பு - 2
* சோம்பு - 2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு, உப்பு சேர்த்து,
2 நிமிடம் ஊற வைத்து, பின் நீரை வடிகட்டிவிட்டு, மீல் மேக்கரில் உள்ள
அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டு, 2 நொடிகள்
ஒருமுறை அரைத்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில், தேங்காய், பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு,
இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து
சிறிது நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தை
சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, சிறிது உப்பு தூவி, குறைவான
தீயில் வைத்து சில நிமிடங்கள் கிளறி விட வேண்டும்.
* அடுத்து அரைத்த மீல் மேக்கரை சேர்த்து, மசாலாவுடன் மீல் மேக்கர்
ஒன்று சேரும் வரை நன்கு கிளறி, இறக்கினால், சுவையான செட்டிநாடு ஸ்டைல்
மீல் மேக்கர் புட்டு தயார்.
குறிப்பு:
* இந்த புட்டு செய்தவுடன், இறுதியில் 2 முட்டைகளை உடைத்து, அத்துடன் மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அடித்து, அதையும் சேர்த்து நன்கு கிளறினால், இன்னும் அட்டகாசமாக இருக்கும்.
Image Courtesy: chettinadrecipesblog



Click it and Unblock the Notifications











