Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
சன்டே ஸ்பெஷல்: காரசாரமான... செட்டிநாடு முட்டை பெப்பர் ப்ரை
Chettinad Egg Pepper Fry Recipe: தினமும் முட்டையை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. முட்டையில் உள்ள சத்துக்களைப் பெற சிறந்த வழி, அவற்றை வேக வைத்து சாப்பிடுவது தான். ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் வேக வைத்த முட்டையை சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் முட்டையை செட்டிநாடு ஸ்டைலில் பெப்பர் ப்ரை செய்து கொடுங்கள்.
இந்த செட்டிநாடு முட்டை பெப்பர் ப்ரை செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். அதோடு இது வெறுமனே சாப்பிடவும் நன்றாக இருக்கும். முக்கியமாக இந்த மாதிரி முட்டையை செய்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு செட்டிநாடு முட்டை பெப்பர் ப்ரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு முட்டை பெப்பர் ப்ரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வேக வைத்த முட்டை - 5
* கடலை எண்ணெய் - 4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - 1/3 டீஸ்பூன்
மசாலா அரைப்பதற்கு...
* பூண்டு - 5 பல்
* இஞ்சி -1/2 இன்ச்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* மிளகு - 2 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் மசாலா அரைப்பதற்கு கொடுத்துள்ள பூண்டு,
இஞ்சி, வெங்காயம், மிளகு, சோம்பு, மல்லி ஆகியவற்றை போட்டு, சிறிது
நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், அரைத்த மசாலாவை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
கிளறிவிட வேண்டும்.
* பின்பு வேக வைத்துள்ள முட்டைகளை இரண்டு துண்டுகளாக வெட்டி வாணலியில்
சேர்த்து மசாலா முட்டையுடன் நன்கு ஒன்று சேரும் வரை கிளறி, குறைவான
தீயில் வைத்து, ரோஸ்ட் செய்ய வேண்டும்.
* முட்டையில் மசாலா நன்கு ஒன்று சேர்ந்து, முட்டை ரோஸ்ட் ஆனதும்,
அடுப்பை அணைத்துவிட்டால், சுவையான மற்றும் காரசாரமான செட்டிநாடு
முட்டை பெப்பர் ப்ரை தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications











