Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
சப்பாத்திக்கு முட்டை கிரேவியை ஒருமுறை இப்படி செய்யுங்க.. டேஸ்ட் இன்னும் அருமையா இருக்கும்...
Chapati Egg Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு அடிக்கடி முட்டை கிரேவி செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரி முட்டை கிரேவியை செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை முட்டை கிரேவியை செய்வதாக இருந்தால், முட்டையை வேக வைத்து வெட்டியோ அல்லது உடைத்து ஊற்றியோ செய்யாமல், துருவிப் போட்டு செய்யுங்கள். இதனால் ருசி இன்னும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இப்படி முட்டை கிரேவியை செய்யும் போது குழந்தைகள் ஒரு சப்பாத்தியை எக்ஸ்ட்ரா சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு முட்டை கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 2 (அரைத்தது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* சோம்புத் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* வேக வைத்த முட்டை - 4 (துருவிக் கொள்ளவும்)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து
நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் அரைத்த தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து
பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சோம்புத் தூள், சீரகத்
தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
நன்கு 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில்
வைத்து 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* கிரேவி கொதிப்பதற்குள், வேக வைத்த முட்டைகளை துருவிக் கொள்ள
வேண்டும்.
* கிரேவி நன்கு கொதித்த பின், துருவி வைத்துள்ள முட்டையை சேர்த்து
நன்கு கிளறி, 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத்
தூவி இறக்கினால், சுவையான முட்டை கிரேவி தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications











