Latest Updates
-
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...!
மசாலா உதிராமல் மொறுமொறுன்னு காலிஃப்ளவர் பக்கோடாவை எப்படி செய்யணும் தெரியுமா?
Cauliflower Pakoda Recipe In Tamil: புரட்டாசி மாதம் என்பதால் அசைவ உணவை மிஸ் செய்யும் பலரும் காலிஃப்ளவரைத் தான் 65 போன்று செய்து அடிக்கடி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டிலும் அப்படி தானா? ஆனால் நீங்கள் எப்போது காலிஃப்ளவர் கொண்டு 65 அல்லது பக்கோடா செய்தாலும், அதில் உள்ள மசாலா உதிர்ந்து விடுமா?
அப்படியானால் நீங்கள் சரியான பக்குவத்தில் மசாலாவை எடுப்பதில்லை என்று அர்த்தம். எனவே அடுத்தமுறை நீங்கள் காலிஃப்ளவர் 65 அல்லது காலிஃப்ளவர் பக்கோடா செய்வதாக இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு செய்யுங்கள். இதனால் மசாலாவும் உதிராது, ருசியும் பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு காலிஃப்ளவர் பக்கோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காலிஃப்ளவர் பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தண்ணீர் - 1/2 லிட்டர்
* கல் உப்பு - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* காலிஃப்ளவர் - 1
மசாலாவிற்கு...
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பச்சரிசி மாவு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் காலிஃப்ளவரை சற்று ஓரளவு பெரிய துண்டுகளாக வெட்டிக்
கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் நீரை ஊற்றி, அத்துடன் கல் உப்பு
மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, நீர் நன்கு கொதிக்க
ஆரம்பித்ததும், அதில் காலிஃப்ளவரை சேர்த்து 2 நிமிடம் வேக வைத்து
இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு, காலிஃப்ளவரை தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள்,
கரம் மசாலா, மிளகுத் தூள், மஞ்சள் தூள், சோள மாவு, கடலை மாவு,
சுவைக்கேற்ப உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பச்சரிசி மாவை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி பேஸ்ட் போல்
கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் காலிஃப்ளவரை சேர்த்து நன்கு மசாலா காலிஃப்ளவருடன் கோட்டிங்
ஆகும் வரை பிரட்டி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், காலிஃப்ளவரை சேர்த்து பொன்னிறமாக
பொரித்து எடுத்தால், சுவையான காலிஃப்ளவர் பக்கோடா தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications










