Latest Updates
-
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா?
முட்டைக்கோஸை ஒருமுறை இப்படி செய்யுங்க... சமைச்ச சாப்பாடு மொத்தமும் நொடில காலியாயிடும்...
Cabbage Pachadi Recipe In Tamil: சாதத்துக்கு எப்போதும் சாம்பார், புளிக்குழம்பு என்று செய்து போரடித்துவிட்டதா? சாதத்துக்கு சற்று வித்தியாசமாக அதே சமயம் செய்வதற்கு ஈஸியா ஏதேனும் செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முட்டைக்கோஸ் உள்ளதா?
அப்படியானால் அந்த முட்டைக்கோஸைக் கொண்டு பச்சடி செய்யுங்கள். இந்த முட்டைக்கோஸ் பச்சடி சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த பச்சடியானது முட்டைக்கோஸில் தான் செய்தீர்கள் என்று நீங்கள் சொல்லாமல் யாருக்கும் தெரியாது. அந்த அளவில் இந்த முட்டைக்கோஸ் பச்சடியின் சுவை இருக்கும்.

உங்களுக்கு முட்டைக்கோஸ் பச்சடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டைக்கோஸ் பச்சடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள.
தேவையான பொருட்கள்:
* முட்டைக்கோஸ் - 150 கிராம்
* புளி - சிறு எலுமிச்சை அளவு
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 1 1 டேபிள் ஸ்பூன்
* துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 4 பல்
* பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)
* வரமிளகாய் - 2
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* தேங்காய் - 2 பெரிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் முட்டைக்கோஸை பொரியலுக்கு வெட்டுவது போன்று பொடியாக
வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் நறுக்கிய முட்டைக்கோஸை இட்லி தட்டில் போட்டு, இட்லி
பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ள
வேண்டும். அதே சமயம் புளியை நீரில் போட்டு ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், மல்லி, துவரம் பருப்பு சேர்த்து நன்கு மொறுமொறுவென்று
வறுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் பூண்டு, பச்சை மிளகாய், வரமிளகாய் சேர்த்து நன்கு
வறுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சீரகத்தை சேர்த்து லேசாக வறுத்து இறக்கி ஒரு தட்டில்
போட்டு குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு வேக வைத்த முட்டைக்கோஸை வாணலியில் உள்ள மீதமுள்ள எண்ணெயில்
போட்டு 5 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். இப்படி
வதக்கும் போது முட்டைக்கோஸின் மணம் நீங்கும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, அத்துடன் ஊற
வைத்த புளி மற்றும் தேங்காயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக நீரை
சேர்க்கக்கூடாது.
* பின்பு அத்துடன் முட்டைக்கோஸை சேர்த்து நீர் சேர்க்காமல் அரைத்து,
ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து அடுப்பை அணைத்துவிட்டு,
மஞ்சள் தூள சேர்த்து கிளறி, அதை அரைத்த பச்சடியுடன் சேர்த்து
கிளறினால், சுவையான முட்டைக்கோஸ் பச்சடி தயார்.
Image Courtesy: Madras Virunthu



Click it and Unblock the Notifications











