டயட்டில் இருப்போருக்கான.. சுவையான ப்ராக்கோலி பொரியல்

நிறைய பேருக்கு ப்ராக்கோலியை எப்படி செய்வதென்று தெரியாமல் இருக்கலாம். ஆனால் ப்ராக்கோலியைக் கொண்டு எளிய முறையில் ஒரு ரெசிபியை செய்யலாம். அது தான் ப்ராக்கோலி பொரியல்.

Posted By:

நாம் அனைவருமே ப்ராக்கோலியை மார்கெட்டில் பார்த்திருப்போம். நிறைய பேருக்கு ப்ராக்கோலியை எப்படி செய்வதென்று தெரியாமல் இருக்கலாம். ஆனால் ப்ராக்கோலியைக் கொண்டு எளிய முறையில் ஒரு ரெசிபியை செய்யலாம். அது தான் ப்ராக்கோலி பொரியல். இந்த ப்ராக்கோலி பொரியலானது சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

Broccoli Poriyal Recipe In Tamil

உங்கள் வீட்டில் இன்று இரவு சப்பாத்தி செய்வதாக இருந்தால், ப்ராக்கோலி பொரியலை சைடு டிஷ்ஷாக செய்யுங்கள். இதனால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும். நீங்கள் டயட்டில் இருந்தால், இந்த காம்பினேஷன் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். உங்களுக்கு ப்ராக்கோலி பொரியல் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ப்ராக்கோலி பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* ப்ராக்கோலி - 1 சிறிய அளவிலான பூ

* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2-3 டீஸ்பூன்

* கடுகு - 1 டீஸ்பூன்

* சீரகம் - 1 டீஸ்பூன்

* எள்ளு விதைகள் - 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ப்ராக்கோலியை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின் அதில் துண்டுகளாக்கப்பட்ட ப்ராக்கோலியை சேர்த்து 5 நிமிடம் ஊற வைத்து, நீரை வடிகட்டிவிட்டு, ப்ராக்கோலியை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் மல்லித் தூள் மற்றும் எள்ளு விதைகளை சேர்த்து வதக்கி, பின் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பிறகு அதில் சிறிது உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

* அடுத்து அதில் ப்ராக்கோலியை சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில் வைத்து, 7-8 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான ப்ராக்கோலி பொரியல் தயார்.

Image Courtesy: smithakalluraya

[ of 5 - Users]
Story first published: Tuesday, February 21, 2023, 18:30 [IST]
Desktop Bottom Promotion