Just In
- 9 min ago
சுவையான... தேங்காய் சாதம்
- 1 hr ago
ஆண்களே! உங்க மனைவிகிட்ட இந்த அறிகுறிகள் தெரிஞ்சா ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணுமாம்...ஏன் தெரியுமா?
- 1 hr ago
இந்த பிரச்சனை இருந்தா மாம்பழம் சாப்பிடாதீங்க... இல்லன்னா அது பெரிய ஆபத்தாயிடும்...
- 1 hr ago
வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்க லாக்கர் இந்த இடத்தில் இருந்தா உங்க வறுமை எப்பவுமே உங்களைவிட்டு போகாது!
Don't Miss
- News
புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதில் ஆளுநர் ரவி தீவிரம்.. அரசுகள் மறைத்த கலாச்சாரத்தை மீட்குமாம்
- Sports
"ப்ளான் சக்சஸ்" டாஸில் தோற்றாலும் ஆர்சிபிக்கு அடித்த லக்.. எவ்வளவு ரன்கள் அடித்தால் வெற்றி பெறலாம்?
- Movies
அதுக்குள்ள ஷுட்டிங் முடிச்சுட்டாங்களா...அசத்தல் அப்டேட்டுடன் வந்த ஜெயம் ரவியின் அகிலன்
- Finance
கிரெடிட் ஸ்கோர் குறைஞ்சிருக்கா.. இந்த 5 முக்கிய விஷயங்களில் கவனமா இருங்க..!
- Technology
ரூ.12,500-க்கு ஒப்போ ஏ57 2022 அறிமுகம்: மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஓசி, 5000 எம்ஏஎச் பேட்டரி!
- Automobiles
இந்த கார்களில் எந்த பிரச்சனையும் இல்லை.. ஆனா விற்பனையே ஆகல...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கத்திரிக்காய் சட்னி
உங்கள் வீட்டில் உள்ளோர் இட்லி, தோசைக்கு வித்தியாசமான சட்னி செய்யுமாறு சொல்கிறார்களா? என்ன சட்னி செய்வதென்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு சுவையான கத்திரிக்காய் சட்னியை செய்யுங்கள். இந்த கத்திரிக்காய் சட்னி இட்லி, தோசைக்கு மிகவும் அட்டகாசமாக இருக்கும். அதோடு இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.
உங்களுக்கு கத்திரிக்காய் சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 3
* பூண்டு - 4 பல் (நறுக்கியது)
* பெரிய கத்திரிக்காய் - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - 1 சிறிய அளவு
* தண்ணீர் - தேவையான அளவு
* சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கி, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியில் கத்திரிக்காய் சேர்த்து, சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, புளியை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதையும் பூண்டு அரைத்த மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் சர்க்கரையை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அடுத்து, அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கத்திரிக்காய் சட்னி தயார்.
Image Courtesy: yummytummyaarthi