சனி, குரு, ராகு-கேதுவின் நிலைகளால் 2027 வரை ராஜயோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

Saturn, Jupiter, Rahu, Ketu Planets Position: ஜோதிடத்தின் படி கிரகங்களின் நிலைகள் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றி, மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நவகிரகங்களில் சனி, குரு, ராகு, கேது போன்ற கிரகங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Saturn Jupiter Rahu Ketu Planets Position Will Give Rajyog To These Zodiac Signs

ஜோதிடக் கணக்கீடுகளின்படி, இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும், சனி, குரு மற்றும் ராகு-கேது ஆகிய மூன்று முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, ராஜயோகத்திற்கு இணையான பலன்களைத் தரவுள்ளன. இப்போது இந்த கிரகங்களின் பெயர்ச்சிகள் மற்றும் எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர் என்பதைக் காண்போம்.

கிரக நிலைகள்

சனி - ஜோதிடத்தின் படி, சனி பகவான் 2025 ஆம் ஆண்டின் மார்ச் 29 முதல் 2027 ஆம் ஆண்டின் ஜூன் 03 ஆம் தேதி வரை மீன ராசியில் இருப்பார். அதன் பின் மேஷ ராசிக்குள் நுழைவார்.

குரு - குரு பகவான் இந்த ஆண்டு முதல் அதிசார நிலையில் பயணிக்கிறார். மேலும் வரவுள்ள பல ஆண்டுகளும் இந்நிலையிலேயே பயணிக்கவுள்ளார். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் மே 10 ஆம் தேதி முதல் மிதுன ராசியில் பயணித்து வரும் குரு பகவான், 2026 ஆம் ஆண்டின் ஜூன் 02 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைந்து பயணிக்கவுள்ளார். அதன் பின் 2026 அக்டோபர் 30 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைந்து பயணிக்கவுள்ளார்.

ராகு-கேது - நவகிரகங்களில் நிழல் கிரகமாக கருதப்படும் கிரகங்களான ராகு இந்த ஆண்டின் அக்டோபர் வரை கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் பயணிக்கவுள்ளனர்.

மேஷம்

சனி, குரு, ராகு-கேதுவின் நிலைகளால் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். குறிப்பாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தற்போது சனி பகவான் 12 ஆவது வீட்டில் இருப்பதால், ஏழரை சனியின் முதல் கட்டம் நடக்கிறது. அடுத்த ஆண்டு சனி பகவான் மேஷ ராசிக்கு சென்ற பின், ஓரளவு சனியின் தாக்கம் குறையும். மேலும் இந்த ஆண்டில் குரு பகவான் 3 மற்றும் 4 ஆம் வீடுகளில் சஞ்சரித்து, 5 ஆம் வீடுகளில் நிலைபெறுவதால், வருமானத்தில் உயர்வு ஏற்படும் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இது தவிர ராகு 11 ஆவது வீட்டில் இருந்து வருமானத்தை அதிகரிக்கச் செய்வார். அதேப் போல் கேது 5 ஆவது வீட்டில் இருப்பதால், காதல் வாழ்க்கை மற்றும் குழந்தைகள் விஷயங்களில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் நல்ல அதிர்ஷ்டத்துடன், முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். இந்த ஆண்டில் சனி பகவான் பாக்ய ஸ்தானத்தில் இருந்து கடினமாக உழைக்கத் தூண்டுவார். 2027 ஆம் ஆண்டில் மேஷ ராசிக்குள் சென்ற பின் மங்களகரமானதாக இருக்கும். அதுவும் பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். 2026 ஜூன் 02 ஆம் தேதி குரு பகவான் கடக ராசிக்குள் நுழைந்த பின், தன்னம்பிக்கை அதிகரித்து, வியாபாரத்தில் லாபத்தையும், முன்னேற்றத்தையும் கொண்டு வரும். திருமண வாழ்வில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். அரசியலில் இருப்பவர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டின் மீதமுள்ள மாதங்கள் மட்டுமின்றி, 2027 ஆம் ஆண்டும் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். 6 ஆவது வீட்டில் சனி பகவான் இருப்பதால் எதிரிகளை வெல்லவும், தடைகளை அகற்றவும் உதவும். குரு பகவானின் நிலையால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். அக்டோபருக்கு பின் குரு பகவான் 11 ஆவது வீட்டிற்கு செல்வது, நல்ல நிதி ஆதாயங்களுடன், புதிய வருமான ஆதாரங்களையும் உருவாக்கும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டின் இனிவரும் மாதங்கள் மிகவும் அற்புதமாக இருக்கும். சனி பகவான் 3 ஆவது வீட்டில் இருப்பதால், தைரியம் அதிகரிக்கும். ஜூன் மாதத்தில் 7 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்வதால், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியுடன், திருமண வாழ்க்கையில் சந்தோஷத்தைக் கொண்டு வரும். அதோடு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Saturday, May 2, 2026, 19:14 [IST]
Desktop Bottom Promotion