சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?

Saturn Rise In Pisces 2026: வேத ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது வாழ்க்கையில் ஆழமாக தாக்கத்தை ஏற்படுத்தும் மிகவும் முக்கியமான கிரகமாகும். நவகிரகங்களில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். மேலும் இவர் ஒருவருக்கு வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிய வைக்கக்கூடியவர். அதற்காக பலவிதமான சோதனைகளை கொடுத்து, அதை சாதனையாக்குவதற்கான வழியையும் காட்டுவார்.

Saturn Rise In Pisces 2026 These Zodiac Signs Will Face Many Problems In Life

இப்படிப்பட்ட சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். இதற்கிடைப்பட்ட காலத்தில் இவர் அவ்வப்போது அஸ்தமனமாகி உதயமாவதோடு, வக்ர நிலையிலும் பயணிப்பார். அந்த வகையில் சனி பகவான் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் அஸ்தமன நிலையில் பலவீனமாக இதுவரை இருந்தார். இந்நிலையில் ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று சனி பகவான் மீன ராசியில் உதயமாகி, மிகவும் செல்வாக்குமிக்கவராகியுள்ளார்.

இப்படி சனி பகவான் உதயமாகியிருப்பதால், சில ராசிக்காரர்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். அதே வேளையில் சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பலவிதமான சவால்களை சந்திப்பார்கள். அதுவும் ஏழரை சனி, அஷ்டம, அர்த்தாஷ்டம சனி நடப்பவர்களுக்கு வாழ்க்கை பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும். இப்போது சனி பகவான் மீன ராசியில் உதயமாகியிருப்பதால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் உதயமாகியுள்ளார். இந்த வீட்டில் சனி பகவான் இருப்பதால், மீன ராசிக்காரர்கள் ஏழரை சனியின் முதல் கட்டத்தை அனுபவித்து வருகின்றனர். அதுவும் சனி பகவான் உதயமாகியிருப்பதால், இக்காலம் மிகவும் சவாலானதாக இருக்கும். செலவுகள் எதிர்பாராத அளவில் அதிகரிக்கும். மனம் அமைதியின்றி இருக்கும். எவ்வளவு தான் முயற்சித்தாலும், வெற்றி பெற முடியாது. இருப்பினும், இப்படிப்பட்ட சூழ்நிலையில் முயற்சியை கைவிடாமல், மனம் தளராமல் தொடர்ந்து முயற்சிப்பதோடு, பொறுமையாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

கடகம்

கடக ராசியின் 9 ஆவது வீட்டில் சனி பகவான் உள்ளார். இந்நிலையில் சனி பகவான் உதயமாகியிருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு எதுவும் இருக்காது. படிப்பில் மாணவர்கள் சற்று மந்தமாக இருப்பார்கள். தொழிலில் போட்டும் திட்டங்கள் வெற்றி அடையாது. வேலைகள் முடிவடைய தாமதமாகலாம். இந்நிலையில் மற்றவர்களை சார்ந்திருக்காமல், சொந்த கடின உழைப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் சனி பகவான் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி நடக்கிறது. இந்நிலையில் சனி பகவான் உதயமாகியிருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு இனி வரும் காலம் ஏற்றதாழ்வு நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகக்வடும். பண விஷயங்களிலும், தொழில் விஷயங்களிலும் சற்று கவனமாக இருக்க வேண்டும். மொத்தத்தில் இன்று முதல் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். எதையும் புரிந்து செய்ய வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டில் சனி பகவான் உதயமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் காதர் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திப்பார்கள். மாணவர்கள் படிப்பில் சிரமத்தை சந்திக்க நேரிடும். உறவுகளில் விரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அதுவும் தவறான புரிதல் காரணமாக விரிசல் ஏற்படும். எனவே எப்போதும் நன்கு சிந்தித்து பேச பேண்டும். மாணவர்கள் படிப்பில் வழக்கத்தை விட கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் சனி பகவான் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டம் நடக்கிறது. இந்நிலையில் சனி பகவான் உதயமாகியிருப்பதால், பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும் என்பதால் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில் பேச்சால் வீட்டில் சண்டைகள் வரக்கூடும். இதனால் குடும்ப வாழ்வில் அமைதி குறையும். இக்காலத்தில் எந்த முடிவுகளையும் புத்திசாலித்தனமாக நன்கு யோசித்து எடுக்க வேண்டும்.

சனியின் தாக்கம் குறைய செய்ய வேண்டிய பரிகாரங்கள்

* சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு கடுகு தீபம் ஏற்ற வேண்டும். இது சனி பகவானின் ஆசியைப் பெற்றுத் தரும்.

* கருப்பு உளுந்து, கருப்பு எள்ளு, போர்வை அல்லது இரும்பு பொருட்களை தானம் செய்வது நல்லது. இது வாழ்வில் உள்ள கஷ்டங்களைக் குறைக்கும்.

* சனிக்கிழமைகளில் அரச மரத்திற்கு அடியில் ஒரு தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும். இது சனியின் தாக்கத்தைக் குறைக்க உதவும்.

* முக்கியமாக அனுமன் சாலிசாவை பாராயணம் செய்ய வேண்டும் மற்றும் அனுமனை வழிபாடு செய்ய வேண்டும். இது சனியின் மோசமான விளைவுகளைக் குறைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, April 23, 2026, 14:56 [IST]
Desktop Bottom Promotion