Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது!
Guru Peyarchi 2026: ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் வரை இருப்பார். தற்போது குரு பகவான் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் குரு பகவான் ஜூன் 02 ஆம் தேதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழையவுள்ளார்.

இந்த கடக ராசியின் அதிபதி மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன். இந்த கடக ராசியில் குரு பகவான் அக்டோபர் 31 ஆம் தேதி வரை இருப்பார். அதன் பின் சூரியனின் சிம்ம ராசிக்குள் நுழைவார். இந்த கடக ராசிக்குள் குரு பகவான் நுழையும் போது பஞ்ச மகாபுருஷ ராஜயோகங்களுள் ஒன்றான ஹன்ஸ் ராஜயோகம் உருவாகவுள்ளது.
இந்த ராஜயோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும். குறிப்பாக 4 ராசிக்காரர்கள் மகத்தான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது குரு பகவான் கடக ராசிக்குள் நுழைவதால் நல்ல செழிப்பான வாழ்க்கையை வாழப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை மேம்படும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பேச்சில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் குறிப்பிடத்தக்க நன்மைகளைப் பெறுவீர்க.ள வேலை தொடர்பாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும் வகையில் இருக்கும். வேலைக்காக வீட்டை விட்டு தொலைதூரத்தில் இருப்பவர்கள், தங்களின் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள்.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலதிபர்கள் புதிய சாதனைகளை புரிவார்கள். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புக்கள்து. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். அறிவுத்திறன் சிறப்பாக இருக்கும். முக்கியமாக இந்த பெயர்ச்சி காலத்தில் எடுக்கும் முடிவுகள் நீண்ட காலத்தில் நல்ல பலனளிக்கும். பணவு வரவு அதிகரிக்கும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவீர்கள். செல்வம் மலைப்போல குவியும் வாய்ப்புக்கள் உள்ளன. இருந்தாலும், செலவுகளும் அதிகம் ஏற்படும். அதுவும் இந்த செலவுகள் ஆடம்பரத்திற்காக இருக்கலாம். குரு பகவானின் ஆசியால் புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, அந்த சொத்து கைக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசியின் 7 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையும் ஆதரவாக இருப்பார். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் நல்ல பலன்களைப் பெறக்கூடும். குடும்பத்தினருடனான பிணைப்பு வலுபெறும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுடன் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



