Latest Updates
-
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
கோடையில் பால் போன்ற சருமம் வேண்டுமா? அப்ப இந்த மைதா ஃபேஸ் பேக்கை போடுங்க..
Summer Skin Care Tips In Tamil: கொளுத்தும் கோடை வெயிலால் சருமத்தில் ஏராளமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதில் முக்கியமாக சருமம் கருமையாகி, பொலிவிழந்தும், புத்துணர்ச்சியின்றியும் இருக்கும். இந்நிலையில் சருமத்திற்கு போதுமான பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும். அதுவும் வெயிலால் சருமத்தின் நிறம் மாறாமல் இருக்கவும், சருமத்தின் அழகையும், அமைப்பையும் மேம்படுத்தவும் உதவும் பல்வேறு இயற்கை பொருட்கள் நம் வீட்டு சமையலறையில் உள்ளன. அதில் ஒன்று தான் மைதா.

இந்த மைதாவைக் கொண்டு ஃபேஸ் பேக் போடும் போது, சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமத்தின் அமைப்பு மேம்படும். மேலும் மைதா சருமத்தில் கொலாஜன் உற்பத்திக்கு ஆதரவாக இருந்து, சருமத்தை இளமையாக வைத்துக் கொள்ளவும் உதவும். முக்கியமாக இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, சருமத்தை மென்மையாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ள உதவும். இப்போது இப்படிப்பட்ட மைதாவைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்பதைக் காண்போம்.
1. மைதா, எலுமிச்சை மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 3 டேபிள் ஸ்பூன் மைதா மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒரு முறை கழுவ வேண்டும்.
2. மைதா, கற்றாழை மற்றும் ரோஸ் வாட்டர்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் மைதா மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்வதோடு, சருமத்தை இளமையாகவும் வைத்துக் கொள்ளும்.
3. மைதா, மஞ்சள் தூள் மற்றும் ஆலிவ் ஆயில்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் மைதா, சில துளிகள் ஆலிவ் ஆயில் மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் காய வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அழுக்கை நீக்கி, பொலிவைத் தரும்.
4. மைதா மற்றும் தயிர்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் மைதாவை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள கருமையை நீக்கி, சரும நிறத்தை அதிகரிக்கும்.
5. மைதா, தேன் மற்றும் பால்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் மைதா, 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, சருமத்தை ஈரப்பதத்துடனும் வைத்துக் கொள்ள உதவும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


