Latest Updates
-
டாய்லெட் பேப்பரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க -
இந்த பிரச்சனை இருந்தா, பூண்டு அதிகமா சாப்பிடாதீங்க.. - எச்சரிக்கும் டாக்டர்! -
நாகர்கோயில் வாழைக்காய் துவட்டல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
September 2026 Career Horoscope: செப்டம்பர் மாதம் தொழில் ரீதியாக 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இந்தியாவில் பின்னோக்கி பாயும் ஒரேயொரு நதி எது தெரியுமா? இது பின்னோக்கி பாய காரணம் என்ன தெரியுமா? -
லன்ச்பாக்ஸ்-க்கு ஒருடைம் இப்படி கீரை சாதம் செஞ்சு குடுங்க.. ருசியாவும் இருக்கும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 01 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு நல்ல நேரம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்.. -
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் லட்டு - இப்படி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது!
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க..
Summer Skin Care Tips In Tamil: கோடை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கமும் தீவிரமாகிக் கொண்டே இருக்கிறது. இப்படி வெயில் கொளுத்துவதால் வெளியே செல்லும் போது, சூரியனிடம் இருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்கள் சருமத்தை மிகவும் மோசமாக சேதப்படுத்தும். இதன் விளைவாக சருமத்தின் நிறம் கருமையாக மாறக்கூடும்.

இந்நிலையில் கோடைக்காலத்தில் உடலையும், சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காகவே இயற்கையானது இக்காலத்தில் தர்பூசணி, வெள்ளரிக்காய், மாம்பழம், முலாம் பழம் போன்ற சீசன் பழங்களை நமக்கு அளித்துள்ளது. இந்த பழங்கள் நீர்ச்சத்து நிறைந்தது மட்டுமின்றி, ஏராளமான சத்துக்களையும் உள்ளடக்கியது.
இந்த பழங்களை கோடைக்காலத்தில் உட்கொள்வது மட்டுமின்றி, அவற்றைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், வெயிலால் ஏற்படும் சரும சேதம் தடுக்கப்படுவதோடு, சருமமும் கருமையாகாமல் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும். அந்த வகையில் இப்போது வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி அதிகம் நிறைந்த முலாம் பழத்தைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்பது குறித்து காண்போம்.
1. முலாம் பழம் மற்றும் பால் பவுடர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் பால் பவுடரை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் மசித்த முலாம் பழ கூழை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* பின்னர் முகத்தை துடைத்துவிட்டு, மைல்டு மாய்ஸ்சுரைசரை சருமத்தில் தடவ வேண்டும்.
* இப்படி அடிக்கடி ஃபேஸ் பேக் போட்டு வந்தால், சருமம் கருமையாகாமல் எப்போதும் பொலிவோடு இருக்கும்.
2. முலாம் பழம் மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் முலாம் பழ கூழை எடுத்து, அத்துடன் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பிறகு 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி, முகத்தை மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் ஒரு ஸ்க்ரப் போன்று செயல்படுவதால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி, முகத்தில் பிரகாசத்தை அளிக்கும்.
3. முலாம் பழம் மற்றும் பீச் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் முலாம் பழ கூழ் மற்றும் பீச் பழத்தின் கூழை ஒன்றாக எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* சிறந்த பலனைப் பெற, இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த வேண்டும்.
4. முலாம் பழம், கடலை மாவு மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் சிறிது கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாற்றினை எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது முலாம் பழ கூழை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர, சருமத்தில் எண்ணெய் பசை கட்டுப்படுவதோடு, முகப்பரு வருவதும் தடுக்கப்படும்.
5. முலாம் பழம் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு சிறிது முலாம் பழ கூழை எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

