Latest Updates
-
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்..
கேரட்டும், மாங்காயும் இருந்தா.. இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாத்துக்குமே டக்கரா இருக்கும்..
Carrot Manga Pachadi Recipe In Tamil: உங்கள் வீட்டில் மாங்காய் உள்ளதா? பொதுவாக மாங்காய் சீசன் வந்துவிட்டாலே, அந்த மாங்காயைக் கொண்டு மாங்காய் ஊறுகாய், மாங்காய் சாம்பார், மாங்காய் தொக்கு, மாங்காய் குழம்பு என்று பலவிதமான ரெசிபிக்களை செய்து சுவைத்து பார்ப்போம்.

ஆனால் மாங்காயும், கேரட்டும் இருந்தால், அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் பச்சடியை செய்யுங்கள். இந்த கேரட் மாங்காய் பச்சடி வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, சாதம் மற்றும் அனைத்து விதமான டிபனுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக ஒருமுறை இந்த பச்சடியை செய்தால், பின் அடிக்கடி செய்வீர்கள்.
இந்த கேரட் மாங்காய் பச்சடி ரெசிபி குறித்து கோவை கஃபே என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த கேரட் மாங்காய் பச்சடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் மாங்காய் பச்சடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு..
* கேரட் - 1
* மாங்காய் - பாதி
* பூண்டு - 5 பல்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் கேரட்டின் தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக்கி மிக்சர்
ஜாரில் போட்டு ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பாதி மாங்காயை துண்டுகளாக்கி சேர்த்து, அத்துடன் பூண்டு
பற்கள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பெருங்காயத் தூள் மற்றும் வரமிளகாய் சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் கறிவேப்பிலை சேர்த்து பொரிய விட வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ளதை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
கலந்து, நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக வைத்து இறக்கினால்,
சுவையான கேரட் மாங்காய் பச்சடி தயார்.



Click it and Unblock the Notifications
