Latest Updates
-
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா
Mathi Meen Benefits: அடிக்கடி மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர் தினேஷ்!
Mathi Meen Benefits In Tamil: அசைவ உணவுகளிலேயே கடல் உணவுகள் மிகவும் ருசியானவை மட்டுமின்றி, சத்தானவையும் கூட. அதுவும் மீன்கள் மிகவும் நல்லது. ஏனெனில் மீன்களில் இதயத்திற்கு நன்மை விளைவிக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ளன. இது தவிர ஏராளமான அத்தியாவசிய சத்துக்களும் மீன்களில் நிறைந்துள்ளன. இந்த மீன்களில் சால்மன், நெத்திலி, கட்லா என பல வகைகள் உள்ளன. மேலும் மீன்களில் மிகவும் சத்தானவையாக சால்மன் மீன் கருதப்படுகிறது. ஆனால் அந்த மீனிற்கு இணையான சத்துக்கள் நம் ஊர்களில் கிடைக்கும் மத்தி மீன்களில் உள்ளன என்பது தெரியுமா?

மத்தி மீன்கள் அளவில் சிறியதாக இருந்தாலும், ஏராளமான சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளன. சொல்லப்போனால் மற்ற மீன்களில் கூட முட்களை நீக்கிவிட்டு தான் சாப்பிட முடியும். ஆனால் மத்தி மீன்களின் முட்கள் மிகவும் மென்மையாகவும், சிறிதாகவும் இருப்பதால், அதை அப்படியே மென்று சாப்பிடலாம். எனவே உங்களுக்கு மீன் ரொம்ப பிடிக்குமானால், அடிக்கடி மத்தி மீன் வாங்கி சாப்பிடுங்கள். இதனால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
இந்த மத்தி மீன்களின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து சர்க்கரை நோய் நிபுணரான டாக்டர் தினேஷ் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவை என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. வலிமையான எலும்புகள்
"மத்தி மீனில் வைட்டமின் டி அதிகம் இருப்பதால், எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவும்" என்று கூறினார். எனவே எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைத்தால், மத்தி மீன்களை அடிக்கடி வாங்கி சாப்பிடுங்கள்.
2. நரம்புகளுக்கு நல்லது
"மத்தி மீன்களில் வைட்டமின் பி12 உள்ளது. இது நரம்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தும்" என்று கூறினார். ஆகவே நரம்பு தொடர்பான பிரச்சனைகளைக் கொண்டவர்கள் மற்றும் நரம்பு பிரச்சனைகள் கூடாதெனில் மத்தி மீன்களை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.
3. மூளை செயல்பாடு மேம்படும்
மற்ற மீன்களை விட "மத்தி மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. இவை மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும். இதன் மூலம் நினைவாற்றல் அதிகரிக்கும்" என்று கூறினார். ஆகவே படிக்கும் குழந்தைகளுக்கு மத்தி மீன்களை அடிக்கடி சமைத்து கொடுங்கள். இதனால் அவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
4. தசை வலிமை
"மத்தி மீன்களில் உள்ள புரோட்டீன் ஏராளமாக உள்ளது. இது தசைகளுக்கு நல்ல வலிமையைக் கொடுக்கும். மேலும் இது தசைகளில் ஏற்பட்டுள்ள காயம் விரைவில் சரி செய்ய உதவுகிறது" என்று கூறினார். ஆகவே தினமும் ஜிம் செல்பவர்கள் மத்தி மீன்களை தங்களின் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
5. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
"மத்தி மீன்களில் இரும்புச்சத்து மற்றும் செலினியம் அதிகம் உள்ளன. இவை நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் மற்றும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் உதவி புரியும்" என்று கூறினார். எனவே வீட்டில் குழந்தைகள், பெரியவர்கள் இருந்தால், அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த இந்த மீனை அடிக்கடி வாங்கி சமைத்து கொடுங்கள்.
6. எலும்பு ஆரோக்கியம் மேம்படும்
"மத்தி மீன்களில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவி புரியும்" என்று டாக்டர் கூறினார். ஆகவே எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடாதெனில், மத்தி மீனை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

