For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாரம் ஒருமுறை நெத்திலி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

By Maha
|

மீன்களில் மிகவும் மலிவான விலையில் கிடைப்பது தான் நெத்திலி மீன். இந்த மீன் சிறியதாக இருந்தாலும் ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியது. இதற்கு இந்த மீனை சமைத்த பின், அது மென்மையாகிவிடுவதால், இதனை முட்களோடு சாப்பிடுவதால் தான்.

மத்தி மீன் சாப்பிடுவதால் ஏற்படும் வியக்கத்தக்க ஆரோக்கிய நன்மைகள்!!

பொதுவாக மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் இருக்கும். இந்த மீனில் ஒமேகா-3 அதிகம் இருப்பதோடு, கலோரிகள் குறைவு மற்றும் வைட்டமின்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. எனவே விலை மலிவில் கிடைக்கும் இந்த மீனை சாதாரணமாக நினைத்துவிடாமல், வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வாருங்கள்.

இறால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

இங்கு நெத்திலி மீனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து, இந்த மீனின் அற்புதத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

நெத்திலி மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எப்படியெனில், இந்த மீனை உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

செல்லுலார் பழுதுபார்த்தல்

செல்லுலார் பழுதுபார்த்தல்

செல்லுலார் மற்றும் இணைப்புத்திசுக்களின் வளர்ச்சிக்கும், பழுது பார்க்கவும் தேவையான புரோட்டீன் நெத்திலி மீனில் உள்ளது.

Image Courtesy

சரும ஆரோக்கியம்

சரும ஆரோக்கியம்

நெத்திலி மீனில் அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்களுடன், வைட்டமின் ஈ, செலினியம், போன்ற சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களும் உள்ளன. எனவே அடிக்கடி நெத்திலி மீனை உணவில் சேர்த்து வந்தால், சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு, சருமம் பொலிவோடு இருக்கும்.

வலிமையான பற்கள் மற்றும் எலும்புகள்

வலிமையான பற்கள் மற்றும் எலும்புகள்

நெத்திலி மீனில் கால்சியம் வளமாக நிறைந்துள்ளது. இது பற்கள் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் அத்தியாவசியமான ஓர் சத்து. அதுமட்டுமின்றி இதில் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.

கண் ஆரோக்கியம்

கண் ஆரோக்கியம்

நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், கண் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

எடை குறைவு

எடை குறைவு

நெத்திலி மீனில் கலோரிகள் குறைவு மற்றும் புரோட்டீன் அதிகம் என்பதால், இது உடல் எடை குறைவதற்கும் வழிவகுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Eating Nethili Fish

Here are some health benefits of eating nethili fish. Read on to know more...
Story first published: Monday, January 25, 2016, 18:11 [IST]
Desktop Bottom Promotion