Latest Updates
-
56 ஆண்டுகளுக்கு பின் குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: அதிர்ஷ்ட மழையில் நனையும் 3 ராசிகள்! -
லன்ச்பாக்ஸ்-க்கு தக்காளி சாதத்தை இப்படி செய்யுங்க.. பிரியாணி மாதிரி டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
கருவளையங்கள் உங்களை டல்லா காட்டுதா? அப்ப இந்த மாஸ்க்கை அடிக்கடி போடுங்க.. -
ஆடி பௌர்ணமியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு - எப்படி செய்யணும் தெரியுமா? -
World Hepatitis Day 2026: இந்த அறிகுறி இருந்தா அசால்ட்டா இருக்காதீங்க.. அது ஹெபடைடிஸின் எச்சரிக்கை அறிகுறி! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி நாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கலாம்.. உஷார்.. -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, ஒரே வாரத்தில் உடல் எடையில் மாற்றத்தை பாப்பீங்க..! -
இன்றைய ராசிபலன் 28 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சோதனைகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
புதன் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம்
May 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
May 2026 Monthly Numerology Predictions In Tamil: ஒருவரது எதிர்காலத்தை கணிக்கும் சக்தி எண்களுக்கு உள்ளதாக ஒரு நம்பிக்கை உள்ளது. எண்களைக் கொண்டு கணித்து கூறப்படும் ஜோதிடத்தின் ஒரு கிளை தான் எண் கணிதம். இந்த எண் கணிதத்தில், ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டு அந்நபரின் எதிர்காலம், குணாதிசயங்கள், பலம், பலவீனம் போன்ற பல விஷயங்களை அறியலாம்.

2026 ஆம் ஆண்டின் ஐந்தாவது மாதமான மே மாதம் உங்கள் பிறந்த தேதிப்படி எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே, எண் கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதிப்படி 2026 மே மாதம் எப்படி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
எண் 1
1, 10, 19 அல்லது 28 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு மே மாதமானது ஆற்றல், தன்னம்பிக்கை மற்றும் புதிய தொடக்கங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். தலைமைத்துவ திறன்கள் மேம்படும். புதிய தொழிலை தொடங்க நினைத்தால், இம்மாதம் சாதகமாக இருக்கும். உறவுகளைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். உங்கள் உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்த முடியும். நிதி நிலைமை வலுவடையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஒரு சீரான வழக்கத்தை பின்பற்ற வேண்டும். மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும்.
எண் 2
2, 11, 20 அல்லது 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு மே மாதத்தில் பணியிடத்தில் எதிர்பாராத சூழ்நிலைகள் உருவாகும். அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். இம்மாதத்தில் பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம். பண விஷயத்தில் எந்த முடிவுகளையும் நன்கு சிந்தித்து எடுக்க வேண்டும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும். உறவுகளில் தவறான புரிதல்களால் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. மன அமைதியைப் பெற தியானத்தில் ஈடுபடுவது சிறந்ததாக இருக்கும்.
எண் 3
3, 12, 21 அல்லது 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு மே மாதத்தில் சமூக ஈடுபாடு அதிகரிக்கும். புதிய நபர்களின் நட்புக்கள் கிடைக்கும். உங்களின் கருத்துக்களை திறம்பட முன்வைப்பீர்கள். எழுத்து, கலை, ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு இம்மாதம் பயனுள்ளதாக இருக்கும். வரவு செலவுத் திட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்களின் இனிமையான பேச்சு உறவுகளை வலுப்படுத்தும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இம்மாதத்தில் ஆரோக்கியமாகவும், ஆற்றலுடனும் இருக்க உடற்பயிற்சியில் ஈடுபடுவதோடு, உணவுகளிலும் கவனமாக இருக்க வேண்டும்.
எண் 4
4, 13, 22 அல்லது 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மே மாதத்தில் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்று தோன்றக்கூடும். வேலையில் திடீர் மாற்றங்கள் ஏற்படலாம் அல்லது புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். உங்களின் கடின உழைப்பையும், ஒழுக்கத்தையும் நம்பி இருங்கள். உறவுகள் சிறப்பாக இருக்க சிறிதளவு நெகிழ்வுத்தன்மை அவசியம். மனச்சோர்வைத் தவிர்க்க ஓய்வு மிகவும் அவசியம்.
எண் 5
5, 14 அல்லது 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு மே மாதமானது மிகவும் சிறப்பாக இருக்கும். இம்மாதத்தில் அதிக சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும், புதிய வாய்ப்புகளுக்குத் தயாராகவும் இருப்பீர்கள். தொழில் விஷயமாக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புக்கள் கிடைக்கும். உங்களின் பேச்சுத்திறன் நல்ல வெற்றியைத் தரும். உறவுகளைப் பொறுத்தவரை, உற்சாகமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். அன்புக்குரியவர்களின் உணர்வுகளை புறக்கணிக்காதீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அதிக உழைப்பைத் தவிர்த்து, போதுமான ஓய்வெடுங்கள்.
எண் 6
6, 15 அல்லது 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மே மாதத்தில் தொழில் வாழ்க்கைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையில் நீங்கள் ஒரு சமநிலையை ஏற்படுத்த வேண்டும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கலாம். நிதி நிலையிலும் முன்னேற்றம் ஏற்படலாம். இருப்பினும் பண பரிவர்த்தனைகளில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உறவுகளைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
எண் 7
7, 16 அல்லது 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பொதுவாக தனியாக இருக்க விரும்புவார்கள். ஆனால் மே மாதத்தில் மற்றவர்களுடன் அதிகம் தொடர்பு கொண்டு உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும். வேலை தொடர்பாக புதிய தொடர்புகள் கிடைக்கலாம். பண விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். யோகா அல்லது ஆன்மீகச் செயல்பாடுகள் மன அமைதித் தரும்.
எண் 8
8, 17 அல்லது 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு மே மாதம் கடின உழைப்பு மற்றும் சாதனைகள் நிறைந்த மாதமாக இருக்கும். தொழிலில் புதிய பொறுப்புக்கள் கிடைக்கலாம். முயற்சிகளால் கடினமான வேலைகளையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். இருப்பினும், வேலை காரணமாகக் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமல் போவது உறவுகளில் மனக்கசப்பை ஏற்படுத்தும். எனவே சமநிலையைப் பராமரிக்க வேண்டும். நிதி நிலைமை வலுவாக இருக்கும். ஆரோக்கியத்தைப் புறக்கணிக்காதீர்கள்.
எண் 9
9, 18 அல்லது 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு மே மாதத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். புத்துணர்ச்சியுடன் முன்னேறுவீர்கள். தொழிலில் நல்ல மாற்றத்தைக் காணலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இருப்பினும் செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியமாகும். உறவுகளில் உள்ள பழைய தவறான புரிதல்கள் தீர்க்கப்படும். பரஸ்பர புரிதல் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து, நேர்மறையான கண்ணோட்டத்தைப் பேணுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

