Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
5 பிரட் இருந்தா.. ஈவ்னிங் நேரத்துல இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அள்ளும்...
Bread Samosa Recipe In Tamil: மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது உங்கள் வீட்டில் உள்ளோர் ஸ்நாக்ஸ் ஏதாவது கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் பிரட் துண்டுகள் உள்ளதா? அதோடு உருளைக்கிழங்கும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு மொறுமொறுப்பான சமோசா செய்யுங்கள்.
இந்த பிரட் சமோசா, வழக்கமாக கடைகளில் விற்கப்படும் சமோசாவை விட மிகவும் ருசியாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். மழை பெய்யும் வேளையில் இப்படியான சமோசாவை செய்து சாப்பிட்டால் வேற லெவலில் இருக்கும்.

உங்களுக்கு பிரட் சமோசாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிரட் சமோசா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - பாதி (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 2 பல்
* பச்சை மிளகாய் - 1
* இஞ்சி - சிறிய துண்டு
* நற்பதமான பச்சை பட்டாணி - 1/4 கப்
* வேக வைத்த உருளைக்கிழங்கு - 2 (தோலுரித்து மசித்தது)
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* கரம் மசாலா - 1/2
* மிளகாய் தூள் - 1/2
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
* பிரட் - 5 துண்டுகள்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும். அதற்குள் மிக்சர் ஜாரில் இஞ்சி, பூண்டு
மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை வாணலியில் வதங்கிக் கொண்டிருக்கும் வெங்காயத்துடன்
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பச்சை பட்டாணியை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து, அத்துடன்
மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், மசாலா தயார்.
* அடுத்து ஒவ்வொரு பிரட் துண்டுகளையும் எடுத்து, அதன் முனைகளை
கத்தியால் வெட்டி நீக்கிவிட்டு, நடுவே சிறிது உருளைக்கிழங்கு மசாலாவை
வைத்து, முக்கோண வடிவில் மடித்து, முனைகளில் சிறிது நீரை வைத்து
அழுத்திக் கொள்ள வேண்டும். இப்படி செய்யும் போது விரிசல் எதுவும்
வராது. இதேப் போல் அனைத்து பிரட் துண்டுகளையும் செய்ய வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும், சமோசாக்களை போட்டு, பொன்னிறமாக
பொரித்து எடுத்தால், பிரட் சமோசா தயார்.



Click it and Unblock the Notifications











