Latest Updates
-
1 கப் மீல் மேக்கர் இருந்தா.. இந்த பக்குவத்துல கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க... -
குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 4 ராசிகாரர்களுக்கு கோடீஸ்வர யோகம் கூடிவரப்போகுதாம்...! -
இளநீர் Vs நெல்லிக்காய் ஜூஸ் - இவற்றில் கோடையில் குடிக்க சிறந்தது எது? -
Tamil Nadu Election 2026: தமிழ்நாடு அரசிலுடன் தொடர்புடைய புகழ்பெற்ற தமிழ்நாட்டு கோவில்கள் என்னென்ன தெரியுமா? -
12 ஆண்டுகள் கழித்து உச்ச வீட்டில் நுழையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு ராஜயோகம் அடிக்கப்போகுது.. -
சுரைக்காய் வாங்குனா வேர்க்கடலையுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க... செம சைடிஷா இருக்கும்...! -
1 கப் தயிரும், 2 கத்திரிக்காயும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. செம டேஸ்ட்டா இருக்கும்.. -
புதிய பாபா வாங்கா கணிப்பின் படி அமெரிக்கா-ஈரான் போருக்கு பின் அமெரிக்காவின் நிலை என்னவாகும் தெரியுமா? -
IPL 2026: இந்த ஆண்டின் சிஎஸ்கே அணியில் உள்ள மிகச்சிறந்த 5 வீரர்கள்! இவர்களால் ஆட்டமே அதிரடியா இருக்கப்போகுது! -
அலட்சியமாக இருக்குறதுல இந்த 4 ராசிக்காரங்கள யாராலும் அடிச்சிக்கவே முடியாதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
பெங்காலி தக்காளி சட்னி ரெசிபி... ஒரு தடவை அரைச்சு பாருங்க... இனிப்பா, காரமா சூப்பரா இருக்கும்...!
Bengali Tomato Chutney Recipe in Tamil: உங்கள் வீட்டில் காலை அல்லது இரவு எப்போதும் இட்லி, தோசை தான் டிபனாக இருக்குமா? இந்த இட்லி, தோசைக்கு சாம்பார், சட்னியை தான் சைடு டிஷ்ஷாக அதிகம் செய்வீர்களா? குறிப்பாக சட்னி என்றால் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னியை அடிக்கடி செய்வீர்களா? ஏதாவது வித்தியாசமான அதேசமயம் சுவையான புதிய சட்னியை முயற்சி செய்ய விரும்புகிறீர்களா?
உங்கள் வீட்டில் உள்ளோருக்கு தக்காளி சட்னி பிடிக்குமானால், எப்போதும் ஒரே சுவையில் தக்காளி சட்னியை செய்யாமல், ஒருமுறை பெங்காலி ஸ்டைல் தக்காளி சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். இந்த சட்னி இனிப்பும், காரமும் கலந்து வித்தியாசமாக இருப்பதால், குழந்தைகள் இந்த சட்னியை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த ஸ்டைல் சட்னியை செய்தால், வீட்டில் உள்ள அனைவருமே வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு பெங்காலி ஸ்டைல் தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பெங்காலி ஸ்டைல் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 5 பழுத்த தக்காளி
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- 1 வர சிவப்பு மிளகாய்
- தேவையான அளவு உப்பு
- 3 ஸ்பூன் சர்க்கரை
- ½ ஸ்பூன் சோம்புத் தூள்
- 2 பச்சை மிளகாய்
செய்முறை:
- முதலில் தக்காளியை நீளவாக்கில் நறுக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை மிதமான தீயில் வைத்து, அதில் எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், கடுகு மற்றும் காய்ந்த மிளகாயைச் சேர்க்கவும். கடுகு பொரிந்ததும் நறுக்கிய தக்காளித் துண்டுகளைச் சேர்க்கவும்.
- பின் உப்பு மற்றும் சர்க்கரையை தேவையான அளவு தூவுங்கள். நன்றாக கிளறி பாத்திரத்தை மூடி வைத்து, 5 நிமிடங்களுக்கு அல்லது தக்காளி முழுமையாக வேகும் வரை சமைக்கவும்.
- ஒரு கப் தண்ணீர் ஊற்றி, சிறிதளவு உப்பு சேர்த்து சில நிமிடங்கள் சமைக்கவும். பச்சை மிளகாய் மற்றும் சோம்புத் தூளைச் சேர்த்து, நன்கு கலந்துவிட்டு, உப்பின் அளவைச் சரிபார்க்கவும்.
- தேவைப்பட்டால், மேலும் உப்பு சேர்த்துக்கொள்ளலாம். மேலும், சட்னி கூடுதல் இனிப்பாக இருக்க விரும்பினால், கூடுதல் சர்க்கரையைச் சேர்த்துக்கொள்ளவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.
- நன்கு சுண்டி சட்னி பதத்திற்கு வந்ததும் சிறிதளவு சோம்பு தூளை சேர்த்து நன்கு கிளறி அடுப்பை அணைக்கவும்.
- அவ்வளவுதான் வித்தியாசமான பெங்காலி தக்காளி சட்னி ரெடி. இது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











